நிகழ்ச்சியில் போது மேடையில் மயங்கி விழுந்த சஞ்சிவ்! கதறும் ஆல்யா மானஷா... கடும் குழப்பத்தில் பார்வையாளர்கள்
விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி செந்தில் ஸ்ரீஜாவிற்கு அடுத்தபடியாக மிகவும் பிரபலமான காதல் ஜோடி என்றால் அது சஞ்சீவ் மற்றும் ஆல்ய மானஷாவும் தான்.
இவர்கள் ராஜாராணி என்ற சீரியல் மூலம் பிரபலமடைந்தனர்.
சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது, ஆல்யா மானஷா மானஸ் என்பவரை காதலித்து வந்தார். இந்நிலையில் ஆல்யாவிற்கும் சஞ்சீவுக்கும் இடையே காதல் இருப்பதாக பல்வேறு கிசுகிசுக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பின.
இதற்கிடையில் ஆல்யா மானாஷாவிற்கும், மானஸிற்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், இவர்கள் காதல் முற்றிலுமாக முறிந்துவிட்டது.
இதையடுத்து, இவருக்கும், சஞ்சீவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. கிசுகிசுக்கப்பட்ட செய்தி உண்மையானது. இவர்கள் திருமண நிச்சயம் செய்துகொண்டனர்.
விரைவில் திருமணம் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எங்கிட்ட மோதாதே நிகழ்ச்சியில் பங்கேற்ற ராஜாராணி நடிகர் நடிகைகள் கலந்துகொண்டனர்.
அப்போது, சஞ்சீவ் கார்த்திக்கிற்கு அடிபட்டுள்ளது. அதை தீனா அசால்ட்டாக சரி ப்ரோமோவிற்கு கண்டண்ட் கிடைத்துவிட்டது எந்திரிங்க என கூறுகிறார்.