லொஸ்லியாவால் கதறி அழுத ஷெரின்.. ஆறுதல் கூறிய சாக்‌ஷி.. இதுக்கும் இவர் தான் காரணமா?..

Report
552Shares

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வனிதாவிற்கு அடுத்தபடியாக மிகவும் போல்டாக இருப்பது ஷெரின் தான். இதுவரை இவர் யாருக்காகவும் எதற்காகவும் அடங்கிப் போனதே கிடையாது அப்படிப்பட்ட ஷேரினையே லொஸ்லியா கதறி அழவிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாகவே ஷெரின் மற்றும் தர்ஷன் இருவருக்கும் இடையே ஒரு விதமான ரொமான்ஸ் ஓடிக்கொண்டு தான் இருக்கிறது. அதே போல லொஸ்லியா, தர்ஷனை அண்ணன் அதே அழைத்து வருகிறார். இந்த நிலையில் நேற்று ஷெரின், தர்ஷனுக்காக, இதய வடிவில் சப்பாத்தி ஒன்றை சுட்டுக் கொடுத்தார்.

அதனை லொஸ்லியா கத்தி எடுத்து குதி விட்டார். லொஸ்லியா இப்படி செய்தது ஷெரீனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. தர்ஷன், லொஸ்லியாவிடம் ஏன் இப்படி செய்தாய் என்று கேட்டதற்கு ஏன் அப்படி தான் செய்வேன், அவள் வேறு சப்பாத்தி செய்தால் அதனையும் அப்படி தான் குத்துவேன் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் இன்று இந்த பஞ்சாயத்து வந்தது. லொஸ்லியா மற்றும் ஷெரின் இருவரும் இதுகுறித்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது லொஸ்லியா, நான் விளையாட்டிற்காக தான் அப்படி செய்தேன் நான் கூற, அதற்கு ஷெரின், நீ செய்தது மிகவும் வேடிக்கையாக இல்லை, வெறுப்பாக தான் இருந்தது என்றார்.

அதற்கு லொஸ்லியா, நான் விளையாட்டிற்கு தான் செய்தேன் அது உங்களை காயப்படுத்தி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் என்றார். பின்னர் இருவரும் சமாதானம் ஆகி சென்றனர். அதன் இருவரும் தர்ஷனிடம் பேசிய லொஸ்லியா, நான் ஷெரினிடம் சப்பாத்தி கேட்டேன் எனக்கு அவங்க கொடுக்கல அதுனால் தான் நான் அப்படி செய்தேன் என்று சொன்னார்.

அதன் பின்னரும் விடாத லொஸ்லியா, ஷெரீனை தனியாக அழைத்து, நீங்க என் அனுபவம் குறித்து எதோ சொன்னீங்களே. நான் அடுத்தவங்க அனுபவத்தை வைத்து நான் மரியாதையை அடுத்தவங்க வேண்டாம் என்று தான் நான் நினைக்கிறேன் என்றார். இதன் பின்னர் சாக்க்ஷியிடம் தனியாக பேசிக்கொண்டிருந்தார் ஷெரின்.

அப்போது கதறி அழுத ஷெரின், நான் லொஸ்லியாவிடம் எப்போதாவது மரியாதையை குறைவாக நடந்துள்ளேனா. ஆனால், அவள் ஏன் என்னிடம் இப்படி நடந்து கொண்டார். நான் எப்போதும் இப்படி பூன குட்டி, செல்லம் என்று தான் அழைத்தேன். அவளை நான் நன்றாக தான் பார்த்துக்கொண்டேன். ஆனால், அவள் என்னிடமே சொல்கிறாள் நான் எப்படி இருப்பேனோ அப்படி தான் இருப்பேன் என்று என்னிடமே கூறுகிறாள் என்று கதறி அழுதார் ஷெரின்.

21976 total views