வெளியானது பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் பட்டியல்.. ஒரு நாளைக்கு எவ்வளவு தெரியுமா?..

Report
844Shares

பிரபலமான விஜய் ரிவியில் கடந்த 23ஆம் தேதி ஆரம்பமான, தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி மூன்று வாரங்கள் கடந்து கலகலப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. வனிதா விஜயகுமார் உள்ளே இருந்த போது சவுண்ட் பறந்த பிக்பாஸ் வீடு, இப்போது காதல் தோல்வியால் கலை இழந்து உள்ளது என்றே கூறலாம்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளவர்கள் வாங்கும் சம்பளம் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

சம்பள பட்டியல்

அதன்படி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி வரும் பிரபல இயக்குனரான சேரனுக்கு, அதிகப்படியாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 10 லட்ச ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மோகன் வைத்யா, சாண்டி, சரவணன், கவின், போன்றோருக்கு ஒரு நாளைக்கு 35 ஆயிரம் ரூபாய் சம்பளமாக கொடுக்கப்படுவதாகவும், அபிராமி, மதுமிதா, ரேஷ்மா, சாக்ஷி ஆகியோருக்கு ஒரு நாளைக்கு 25 ஆயிரம் சம்பளமாக கொடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் லாஸ்லியா, தர்ஷன், முகேன் போன்றவர்களுக்கு இந்த ஷோவில் உள்ளவரை மொத்தம் ஐந்து லட்ச ரூபாய் கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

எப்போதும் பிரபலங்களின் சம்பள தகவல்கள் பற்றிய விவரங்களை பிக்பாஸ் குழுவினர் ரகசியமாக வைத்திருக்கும் நிலையில் தற்போது வெளியாகி உள்ள தகவல் உறுதியான தகவலா என்பது தெரியவில்லை.

37156 total views