தொடரும் பாலியல் புகார்.. நிறுத்தப்படுகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி..?

Report
567Shares

தமிழில் பிக்பாஸ் நிக்ழ்ச்சி தொடங்கி மூன்று வாரங்கள் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் நிலையில் தெலுங்கில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் வரும் 21 ஆம் திகதி கோலகலமாக தொடங்க இருந்தது.

தெலுங்கில் இந்த நிகழ்ச்சியை நடிகர் நாகர்ஜுனா தொகுத்த வழங்க இருக்கிறார்.

இந்நிலையில், தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து தொடர்ந்து பாலியல் புகார் வந்துகொண்டிருக்கின்றன.

அதாவது இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக போட்டியாளர்கள் தேர்வு நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

இந்த சமயத்தில், தெலுங்கு தொலைக்காட்சி நடிகை மற்றும் தொகுப்பாளினியான ஸ்வேதா ரெட்டி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தேர்வு செய்யப்பட்ட நிலையில், நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக ஸ்வேதா புகார் தெரிவித்திருந்தார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது நடிகை காயத்ரி குப்தாவும் இதேபோல் பிக்பாஸ் ஒருங்கினைப்பாளர்கள் மீது புகார் தெரிவித்துள்ளார்.

அதில், நிகழ்ச்சி குறித்து தன்னிடம் இரண்டரை மாதங்களுக்கு முன்பாகவே ஒப்பந்தம் போட்டுவிட்டார்கள். என்றும் ஆனால் தற்போது அவர்கள் ஒப்பந்ததை அவர்கள் திரும்ப பெற்றுவிட்டனர் எனவும் புகார் தெரிவித்துள்ளார்.

மேலும், நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளர்கள் தன்னிடம் 100 நாட்கள் உங்களால் செக்ஸ் இல்லாமல் இருக்க முடியுமா என்று ஆபசமாக தன்னிடம் கேள்இ எழுப்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, இந்த மாதிரியான கேள்வி கேட்டால் நான் பிக்பாஸ் வரவில்லை என்று கூறியதற்கு டி.ஆர்.பிக்கு உத்திரவாதம் கொடுக்கவில்லை என்றால் நாங்கள் ஏன் உங்களை தேர்வு செய்ய வேண்டும் என்று கேட்டனர்.

இவ்வாறு அவர்கள் கேள்வி எழுப்பிவிட்டு ஏன் இரண்டரை மாதத்துக்கு முன்பு அவர்கள் என்னுடன் ஒப்பந்தம் கையெழுத்திட வேண்டும். அதுமட்டுமல்லாது இரண்டரை மாதத்திற்கு முன்னதாகவே ஏன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் எனக்கான சம்பளத்தை அவர்கள் முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், போட்டியில் பங்கேற்கும் மற்ற போட்டியாளர்களுடன் நான் சண்டையிட வேண்டும், அப்படி செய்யவில்லை என்றால் அவர்களுக்கு டி.ஆர்.பி கிடைக்காதாம்.

இது ஒருபுறமிருக்க, நிகழ்ச்சிக்கு எதிராக பேசக்கூடாது என ஒப்பந்தம் போடுகின்றனர். இது அடிமைத்தனத்தை தவிர வேறு என்ன. பிக்பாஸ் வீட்டில் நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து நாம் பேச வேண்டாமா.

எனவே தான் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளேன். எனக்கு நஷ்டஈடு வேண்டும். பிக்பாஸால் நான் வேறு எந்த புதிய வாய்ப்புகளையும் ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் நான் நிறைய வாய்ப்புகளை இழந்துள்ளேன்'' என்றார்.

25057 total views