உன்ன பிரிஞ்சி 22 நாள் ஆச்சி.. உருக்கமாக புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் தர்ஷனின் காதலி..!

Report
1561Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து மூன்று வாரங்கள் முடிந்துள்ள நிலையில், அதிகமாக மக்கள் மனதை வென்றவர்கள் என்றால் அது இலங்கையைச் சேர்ந்த தர்ஷன் மற்றும் லோஸ்லியா தான்.

லோஸ்லியாவிற்கு பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த தினத்தன்ரே ஆர்மியெல்லாம் தொடங்கப்பட்டு அவரது ஃபாலோயர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இதற்கிடையில் இலங்கை மொடலான தர்ஷன் முதல் வாரத்தில் வாய் பேசாமல் ஊமைப் போல் இருந்தார். இதைக் கண்ட தர்ஷன் இவ்வாறு இருப்பது அவரது கெரியருக்கு பயன்படாது, அவர் இன்னும் நன்றாக தன்னை வெளிகாட்டிக் கொள்ள வேண்டும் எனக் கூறினார்.

அதன்பின்பு, தர்ஷன் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, எரிமலையாய் வெடிக்க ஆரம்பித்துவிட்டார் என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு சரியாக விளையாடினார்.

இந்நிலையில், தர்ஷனின் காதலியான சனம் செட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தர்ஷனை சப்போர்ட் செய்யுமாறு பதிவுகள் வெளியிட்டு வந்தார்.

ஆனால், தற்போது தனது காதலின் பிரிவாக ஒரு போஸ்டை பதிவிட்டுள்ளார்.

அதில், நான் உன்னை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். உன்னை பிரிந்து 22 நாள் ஆச்சு. என்று உருக்கமாக பகிர்ந்துள்ளார்.

56564 total views