சினிமாவுக்காக லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் வேலையை விட்ட தர்ஷன்!

Report
458Shares

பிக்பாஸ் 3 சீசனில் இலங்கையை சேர்ந்த தர்ஷன் மற்றும் லொஸ்லியாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த தர்ஷனின் தந்தை பெயர் தியாகராஜா, 1995ம் ஆண்டு அக்டோபர் 20ம் திகதி பிறந்தார்.

மொடலான இவர் கடந்த 2014ம் ஆண்டு நடந்த மிஸ்டர் இன்டர்நேஷனல் போட்டியில் இலங்கை சார்பாக கலந்து கொண்டார்.

வேறன்ன வேண்டும் என்ற படத்தில் நடித்த தர்ஷன், விளம்பர படங்களிலும், ஆல்பம் பாடல்களிலும் நடித்துள்ளார்.

கல்லூரி படிப்பை முடித்த பின்னர் மென்பொருள் பொறியாளராக ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய தர்ஷனுக்கு, அவுஸ்திரேலியா செல்லும் வாய்ப்பு வந்துள்ளது.

எனினும் சினிமா மீதான ஆசையால் லட்சக்கணக்கான சம்பளத்தை விட்டுவிட்டாராம், இவரது முடிவுக்கு பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து பல்வேறு சவால்களை கடந்து விடாமுயற்சியால் பிக்பாசில் கால்பதித்துள்ளார் தர்ஷன்.

20173 total views