கவினின் காதலால் வெடித்த அடுத்த பிரச்சினை.. சண்டையிடும் சாக்‌ஷி லொஸ்லியா..!

Report
478Shares

பிக் பாஸ் வீட்டில் போட்டியாலர்கள் 24 நாட்களை கடந்து விட்டனர். இதுவரை பாத்திமா பாபு, வனிதா என்று இரண்டு போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில், இந்த நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாக வரப்போகும் போட்டியாளர் யார் என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

இந்நிலையி வீட்டில் கவின், லாஸ்லியா, சாக்சி என ஒரு முக்கோண காதல் கதை நடந்து வருகிறது. இருவரில் யாரை தவிர்ப்பது? யாரை ஏற்று கொள்வது என்று புரியாமல் கவின் ஒருபுறம் தவித்து கொண்டிருக்க, இன்னொரு புறம் இருவருமே கவினை விட்டு ஒதுங்கி போக நினைக்கின்றனர்.

இன்று சாக்ஷி, இதய வடிவில் ஒரு சப்பாத்தியை போடுகிறார். அந்த சப்பாத்தி கவினுக்கு என தெரிய வந்ததும் அந்த சப்பாத்தியை கத்தியால் குத்திய லாஸ்லியா, 'குத்திட்டேன், கொன்னுட்டேன்' என்று கூறுகிறார். இதனால் ஒருபுறம் ஷெரின் திட்ட, இன்னொருபுறம் சாக்ஷி அதிர்ச்சி அடைகிறார்.

இந்த நிலையில் லாஸ்லியாவிடம் தர்ஷன், 'அப்படியெல்லாம் செய்யாதே என்று கூற அதற்கு லாஸ்லியா 'நான் அப்படித்தான் செய்வேன்' என்று கூறுகிறார். அப்போது அங்கு வரும் ஷெரின் 'அவள் ஒண்ணும் சின்னக்குழந்தை இல்லை' என்று தர்ஷனிடம் கூறுகிறார்.

பிக்பாஸ் வீட்டில் சில நாட்களாக அமைதியாக இருந்த லாஸ்லியா, கமல்ஹாசனின் அறிவுரைக்கு பின் தற்போது கொஞ்சம் அதிகமாகவே பேச ஆரம்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

20196 total views