தர்ஷன் திருமணம் செய்வது யாரை?... பல ரகசியங்களை வெளிப்படையாக கூறிய பெற்றோர்

Report
1427Shares

பிக்பாஸ் வீட்டில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன்பக்கம் வைத்திருப்பது ஈழத்து போட்டியாளர்களான தர்ஷன் மற்றும் லொஸ்லியா தான்.

எந்தவொரு ஆர்ப்பாட்டமும் இன்றி, பிரச்சினையின்றி தவறை சரியாக சுட்டிக்காட்டுவது மட்டுமின்றி அவர்களின் இயல்பான நடவடிக்கை மக்களுக்கு அதிகமாகவே பிடித்துவிட்டது.

பிக்பாஸ் தர்ஷன் குறித்து அவரது பெற்றோர் பல விடயங்களைக் கூறியுள்ளனர்.

  • சென்னைக்கு வந்து 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அங்கு போய் அதிகமான அனுபவத்தினை பெற்றுள்ளான்.
  • தர்ஷன் அண்ணன், தங்கையுடன் இருக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாகவும், குறும்புத்தனமாகவும் இருப்பார். அப்பாவைப் பார்த்துவிட்டால் மரியாதை தானாக வந்துவிடுமாம்...
  • லொஸ்லியாவிடம் தர்ஷன் பழகுவது வீட்டில் அவரது தங்கையுடன் பழகுவதைப் போன்று தான் இருக்கின்றது.
  • ஷெரினிடம் ரொமாண்ஸாக பேசியது டாஸ்க்காக இருக்கலாம்.
  • சானம் ஷெட்டியை காதலிக்கவில்லை என்று பெற்றோர்களிடம் கூறியுள்ளாராம். தற்போது பிடித்திருந்தால் அவரது விருப்பத்திற்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்துவிடுவார்களாம்.
  • தர்ஷனுக்கு திருமணம் தங்கை மற்றும் அண்ணாவிற்கு திருமணம் செய்த பின்பு தானாம். அதுவும் 4 ஆண்டுகள் ஆகுமாம்....
  • பிக்பாஸில் பாத்திமா வெளியேற்றத்திற்குப் பின்பு தனிமையாக இருக்கிறாராம்.
  • தவறு யார் செய்தாலும் சுட்டிக்காட்டுவது தர்ஷனுக்கு இயல்பான குணமாம்.
  • தர்ஷனுக்கு மட்டன், முறுகலான தோசை என்றால் ரொம்ப பிடிக்குமாம்.

57872 total views