கவினுடனான காதலை முறித்துக்கொண்ட சாக்‌ஷி.. இதுக்கு லாஸ்லியா தான் காரணமா?..

Report
339Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் சுவாரஷியமாக போய்கொண்டிருக்கும் தருணத்தில் தற்போது சாக்‌ஷி கவின் இடையே காதல் முறிவு ஏற்பட்டுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவின் எப்போதும் அங்குள்ள பெண்கள் பின்னாடியே சுற்றி வருகிறார். பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த முதல் நாளே, அபிராமி, சாக்ஷி, ஷெரின், லாஸ்லியா என அவர்கள் பின்னாலேயே சுற்றி வந்தார் கவின். திருமணம் ஆன பெண்களான மதுமிதா, ரேஷ்மா, வனிதா ஆகியோரிடம் எட்டியே இருந்தார்.

மேலும் அபிராமி, ஷெரின், சாக்ஷி வனிதா ஆகியோருக்கு பிடிக்காது என்ற ஒரே காரணத்திற்காக மதுமிதாவிடம் சண்டை போட்டு அவரிடம் பேசாமலே இருந்தார் கவின்.

பின்னர் அபிராமி கவினிடம் காதலை சொன்னார். அதனை ஏற்க மறுத்தார் கவின். ஆனாலும் அபிராமியுடனான நெருக்கம் மட்டும் குறையவே இல்லை.

அடுத்த சில நாட்களிலேயே சாக்ஷியுடன் நெருக்கம் காட்டிய கவின் அவர் மீது காதல் கொண்டார். சாக்ஷியும் கவினும் கடந்த வாரத்தில் ஒரு நாள் காதலை புரபோஸ் செய்து கொண்டனர்.

அதன் பின் லாஸ்லியாவிடமும் காதலில் அதிக ஆர்வம் கொண்டார். ஆனால் லாஸ்லியா மறுக்க பின்னாடியே சுற்றித்திருந்தார் கவின்.

இந்நிலையில் வெளியான இரண்டாவது ப்ரோமோவில் கவின் சாக்‌ஷி இடையே காதல் முறிவு ஏற்பட்டுள்ளது, இதற்கு காரணம் கவின் லாஸ்லியாவிடம் காட்டிய நெருக்கம் தான் என தெரிகிறது..

10168 total views