வனிதா வெளியேற இது தான் முக்கியக் காரணம்! வயசான காலத்தில் மோகன் வைத்தியாவுக்கு இது தேவையா? வைரலாகும் சர்ச்சைக்குரிய புகைப்படம்

Report
737Shares

பிக் பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சியில் இருந்து வனிதா வெளியேற்றப்பட்டதற்கு அவர் மீது பதியப்பட்டுள்ள வழக்குகள் என்று கூறப்பட்டுள்ளது. இதுபற்றி சட்ட நிபுணர்களும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

அதாவது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கும் ஒரு நபரை அதிக நாட்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க வைக்க முடியாது என வழக்கறிஞர் ஒருவர் கூறியுள்ளார்.

இதனை உறுதி செய்வது போல், பிக் பாஸ் வீட்டில் வனிதா இருந்த மூன்று வார காலத்திற்குள்ளாகவே ஒருமுறை மகளை கடத்திய விவகாரம் தொடர்பாக போலீஸ் விசாரணை நடைபெற்றது.

அப்போதே பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று தான் போலீசார் விசாரணை நடத்தினர். இது அந்த நிகழ்ச்சிக்கு நல்ல விளம்பரமாக அமைந்தது.

ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியின் முக்கிய சாராம்சமே போட்டியாளர்கள் வெளியுலகத் தொடர்பு இல்லாமல் இருக்க வேண்டும் என்பது தான்.

இதனால் அடிக்கடி போலீசார் விசாரணை என வந்தால், நிகழ்ச்சியின் தன்மையே கெட்டுவிடும். எனவே, அதிக வழக்குகள் உள்ள நபரை போட்டியாளராக நீண்ட நாட்கள் வீட்டிற்குள் வைத்திருக்க பிக் பாஸ் விரும்பவில்லை.

வனிதாவால் டிஆர்பி எகிறி வந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் அவர் வெளியேற்றப்பட்டது பல கேள்விகளை எழுப்ப தான் செய்கிறது. ஆனால் அதற்கான சரியான விடை வனிதாவுக்கும், பிக் பாஸ்க்கும் தான் தெரியும். எப்படியும் ஓரிரு நாளில் மீடியாக்களிடம் வனிதா வாய் திறப்பார். அப்போது இந்த ரகசியங்கள் எல்லாம் வெளிவந்தே தீரும்.

இதேவேளை, அது ஒரு புறம் இருக்க மோகன் வைத்தியா பிக் பாஸ் வீட்டி உள்ள பெண்களுடன் கொஞ்சம் நெருக்கமாகவே இருக்கின்னறார்.

பெண்களை கட்டிப்பிடிப்பதும், முத்தமிடுவதும் பார்வையாளர்களுக்கு சுத்தமாக பிடிக்க வில்லை. இந்த நிலையில் அவரை பார்வையாளர்கள் திட்டி வருகின்றனர்.

31861 total views