விருதால் வந்த பிரச்சனை.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு வெளியேறும் பிரபல நடிகை..!

Report
377Shares

பிரபல தொலைக்காட்சியில் சமீபத்தில் நிகழ்ந்த விருதுவிழா ஒன்றில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை ஒருவருக்கு விருது வழங்கியதால் குறித்த சீரியல் நடிகைகளுக்கு இடையே மோதல் உருவாகியுள்ளதாகவும், இதனால் நடிகை சுஜிதா சேரியலை விட்டு வெளியேறுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சின்னத்திரையில் பல சீரியல்கல், ரியாலிட்டி ஷோக்கள் என அனைத்தையும் வித்தியாசமாக கான்பித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது விஜய் தொலைக்காட்சி.

இதில், பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியல் குடும்ப பெண்கள் மத்தியிலும், இளைஞர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த சீரியலில், நடிகை சுஜிதா, சித்ரா, கவிதா என மூன்று நடிகைகளும், நடிகர்களும் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், சமீபத்தில் நடந்த விருது விழா ஒன்றில் சித்ராவுக்கு சிறந்த நடிகை விருது கொடுக்கப்பட்டுள்ளது. சுஜிதாவுக்கு சிறந்த துணை நடிகை விருது அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் நான் நாயகியா? நீ நாயகியா என்ற மோதல் உருவாகியுள்ளது. ஏன் சுஜிதா இந்த சீரியலை விட்டு விலகினால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை என்கின்றனர் சிலர்.

13281 total views