பிக்பாஸ் Wild Card Entry-ல் தர்ஷனின் காதலி?.... வெளியான பல ரகசியங்கள்!

Report
1518Shares

பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் தர்ஷனை பார்வையாளர்கள் அனைவருக்குமே பிடித்துள்ளது. அவரை இளம் பெண்களுக்கு அதிகம் பிடித்துள்ளதால் சிங்கிள்ஸுகளுக்கு கடுப்பாக இருந்தாலும் பையன் நியாயமாக நடந்து கொள்கிறார் என்கிறார்கள்.

கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே வந்த பாத்திமாக லொஸ்லியா, தர்ஷன் இடையே இருக்கும் பாசத்தினைப் பற்றியும், இருவரில் ஒருவர் நிச்சயமாக வெற்றி பெறுவர் என்று கூறினார்.

சில தினங்களுக்கு முன்பு வனிதாவினை எதிர்த்து தர்ஷன் பேசியது ரசிகர்களை இன்னும் அதிகமாகவே கவர்ந்து வந்தது. சமீபத்தில் காதலியுடன் தர்ஷன் என்று புகைப்படம் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

உண்மையில் தர்ஷனுடன் இருந்த அந்த பெண் பிரபல மொடல் சோனம் ஷெட்டி என்பதே.. இவர் மிஸ் சவுத் இந்தியா டைட்டிலை வென்றவர் ஆவார். தற்போது அவர் அளித்துள்ள பேட்டியில், தர்ஷனைக் காதலிக்கிறீர்களா என்று கேட்டதற்கு... பல லட்சம் பெண்கள் காதலிப்பதாக கூறியுள்ளனர். அந்த கூட்டத்தில் நானும் கூறுவதில் பெரிய விடயமில்லை என்று சமார்த்தியமாக பதில் அளித்துள்ளார்.

சோனம் ஷெட்டி பிக்பாஸ் போட்டியாளர்களாக வருவதற்கு அழைக்கப்பட்டாரா? என்று கேட்டதற்கு போட்டியாளர்கள் பட்டியலில் நானும் இருந்தேன். அதன் பின்பு இறுதிப் பட்டியலில் எனது பெயர் வரவில்லை என்று கூறியுள்ளார். ஒருவேளை வொயில்கார்டு எண்ட்ரியாக வருவீர்களா? என்ற கேள்விக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.

தற்போதுள்ள போட்டியாளர்களில் தர்ஷனுக்கு ஈடாக யாரும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

64462 total views