பிக்பாஸ் வீட்டிற்குள் வொயில்கார்ட் எண்ட்ரியில் வரப்போவது யார் தெரியுமா...?

Report
1143Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது வாரம் முடிந்துவிட்ட நிலையில், முதலாவதாக ஃபாத்திமா பாபு மற்றும் இரண்டாவதாக நேற்று வனிதா விஜயக்குமார் வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில், வனிதா வெளியேறியதற்கு பலர் ஆதரவு தெரிவித்து வந்தாலும், சிலர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முழு எண்டெர்டெயின்மெண்ட் வனிதா தானே, அவர் எப்படி வெளியேற்றப்பட்டார் என்று கேள்வி எழுப்பிய வன்னம் உள்ளனர்.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் வொயில்கார்ட் எண்ட்ரியாக பிந்துமாதவி, ஹரிஸ் கல்யாண், சுஜா வருணி, காஜல் பசுபதி ஆகியோரும், இரண்டாவது சீசனில், விஜயலட்சுமியும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர்.

இந்நிலையில், இந்த வருடம் அதாவது, பிக்பாஸ் சீசன் 3-ல் வொயில்கார்ட் எண்ட்ரியாக யார் வருவார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது பிரபல நடிகர் டெல்லி கணேஷின் மகன் மகாதேவன் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் வரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

46932 total views