இலங்கை பெண் லொஸ்லியாவுக்கு பிடித்த நிறம் என்ன தெரியுமா? குழப்பத்தில் ரசிகர்கள்

Report
215Shares

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இளைஞர்களின் கனவுக்கன்னியாக இருந்து வருபவர் லாஸ்லியா.

பரீட்சயமில்லாத போதும் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளார். லாஸ்லியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 24 மணிநேரத்திற்குள் சமூக வலைதளத்தில் இவருக்கு பல்வேறு ஆர்மிக்களை ரசிகர்கள் ஆரம்பித்துவிட்டனர்.

இந்நிலையில் லாஸ்லியாவின் பல்வேறு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் படு வைரலாக பரவி வருகிறது.

இன்று நிகழச்சியில் பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவரும் அவர்களுக்கு பிடித்த நிறத்தில் நிறப்பூச்சை தொட்டு கை அச்சை பதிய வேண்டும் என்றும் அது வீட்டில் இருந்து செல்லும் போது நினைவு பரிசாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

ஒவ்வொருவரும் அவர்களுக்கு பிடித்த நிறத்தில் கை அச்சை பதிவு செய்தனர். லொஸ்லியா எல்லா நிறங்களையும் தொட்டு வித்தியாசமான முறையில் அவரின் கை அச்சை பதிவு செய்தார்.

இதனை பார்த்த லொஸ்லியா ரசிகர்கள் அவருக்கு என்ன நிறம் பிடிக்கும் என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர். இதேவேளை, அவரின் கை அச்சு பதிவும் சமுகவலைத்தளங்களில் பரவி வருகின்றது.

9054 total views