ஈழத்து தர்ஷனின் உண்மை முகம்! பதற்றத்தில் குடும்பம்.. மகிழ்ச்சியின் உச்சத்தில் இலங்கையர்கள்

Report
2929Shares

பிக்பாஸ் வீட்டில் ஈழத்து இளைஞர் தர்ஷன் கொதித்தெழுந்து நேர்மையாக வனிதாவுடன் சண்டை போட்டு இன்றைய நிகழ்ச்சியை மிகவும் பரபரப்பாக்கியிருந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனைவரையும் மிரட்டி வரும் வனிதாவுக்கு எதிராக ஹவுஸ்மேட்ஸ்கள் ஒன்று சேர்ந்திருப்பது நிகழ்ச்சியில் சுவாரசியத்தை கூட்டியிருக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள வனிதா, தான் மட்டும்தான் அந்த வீட்டில் பேச வேண்டும் என்ற ஆதிக்க மனநிலையில் உள்ளார். மேலும் தனக்கு கீழ்தான் மற்றவர்கள் இருக்க வேண்டும் என்றும் நடந்து கொள்கிறார்.

வனிதாவை எதிர்ப்பவர்களை ஒரு வழியாக்கி ஓரம் கட்டி விடுகிறார். இதனால் அவரை எதிர்த்து பேசமுடியாமல் தவித்து வருகின்றனர் சக போட்டியாளர்கள்.

இந்நிலையில் வனிதாவுக்கு எதிராக பொங்கியுள்ளார் தர்ஷன். ஏற்கனவே அபிராமி விவகாரத்தில் வனிதாவிடம் ஏறிய தர்ஷன், இன்று வனிதாவை உண்டு இல்லை என செய்துவிட்டார்.

அதில் வனிதா குரலை உயர்த்தினால் நான் அடங்கி போய்விடுவேன் என நினைக்கிறார் என்று கூறுகிறார் தர்ஷன். இதைத்தான் அவர் எல்லோருக்கும் செய்கிறார் என்றும் கூறுகிறார் தர்ஷன். அப்போது கவின், யாருமே பேசக்கூடாது என்றால் எப்படி என கேட்கிறார்.

இதேபோல் வனிதாவின் கேங்கில் உள்ளவர்களில் ஒருவரான ஷெரினும் அதான் பேசியாச்சுல்லே விடுங்க என்றபடி தர்ஷனுக்கு கோபம் வருகிறதா என கேட்டு அவரை சில் செய்ய தர்ஷனுடன் லிவிங் ஏரியாவில் வாக் செய்கிறார்.

இதுவரை வனிதா கூறியதற்கெல்லாம் ஆமாம் சாமி போட்டவர்களும் அவர் கத்தினால் ஓடி ஒளிந்தவர்களும் இன்று அவரையே எதிர்க்க துணிந்துவிட்டனர். இதனால் என்ன நடக்கிறது என தீவிரமாக யோசிக்க தொடங்கிவிட்டார் வனிதா.

குடும்பத்தில் உள்ளவர்கள் ஓரம் கட்டுவது தெரிந்து அவரே பிறகு அவர்களுடன் சென்று பேசுகின்றார். உண்மையில் இலங்கை இளைஞர் தர்ஷனை பாராட்டியாக வேண்டும். உண்மை, நேர்மை, துணிச்சல் அனைத்தும் அவரிடம் இருக்கின்றது.

அதுமாத்திரம் இன்றி இலங்கை மாவீரன் என்றும் தர்ஷனை ரசிகர்கள் கூறியுள்ளனர். இதேவேளை, அவர் வெற்றி பெறவேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

101387 total views