ஈழத்து இளைஞர் தர்ஷனை சமாளிக்கமுடியாமல் மைக்கை கழட்டி வீசிய வனிதா... இதுக்குள்ள தர்ஷனின் ரொமான்ஸைப் பாருங்க!

Report
2524Shares

பிக்பாஸ் வீட்டில் வனிதாவுக்கு பதிலுக்கு பதில் கொடுத்து மூக்கை உடைக்கும் தர்ஷனால் நிகழ்ச்சி விறுவிறுப்படைந்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள தர்ஷன், நியூட்ரலாக இருந்து வருகிறார். எல்லோரிடமும் ஒரே மாதிரியாக பழகி வருகிறார். இதனால் அவருக்கு ரசிகர்களின் ஆதரவு அதிகரித்துள்ளது.

பிக்பாஸ் வீட்டில் மிகவும் நேர்மையாக இருந்து வெளியேறிய ஃபாத்திமா பாபு கூட தர்ஷன் பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆவார் என கூறியதோடு அதற்காக அவருக்கு ஆசீர்வாதமும் செய்தார். அந்த அளவுக்கு ஹவுஸ்மேட்ஸ்களின் நல்லாதரவை பெற்றுள்ளார் தர்ஷன்.

அஞ்சி ஒதுங்கும் ஹவுஸ்மேட்ஸ்

வனிதா, மீரா என யாராக இருந்தாலும் சரி, தவறு என மனதில் படுவதை பட்டென கூறிவிடுகிறார். வனிதாவின் தவறுகளை சுட்டிக்காட்டவோ, அல்லது அவரது ஆதிக்கத்தை எதிர்க்கவோ மற்ற ஹவுஸ்மேட்ஸ்கள் அஞ்சி ஒதுங்குகின்றனர்.

சண்டைக்காரி வனிதா

காரணம் வனிதாவின் வாய் அப்படி. பிக்பாஸ் வீட்டில் சண்டைக்காரியாகவும் சண்டை மூட்டியாகவும் உள்ளார் வனிதா. தன்னை எதிர்ப்பவர்களுக்கு எதிராக தனது மொத்த கேங்கையும் திருப்பிவிட்டு தனிமைப்படுத்தி விடுவார் வனிதா.

தர்ஷன் குட் ஷாட்

இதனாலேயே ஆண் போட்டியாளர்கள் கூட வனிதாவை எதிர்த்து பேச தயங்குகின்றனர். ஆனால் அதற்கெல்லாம் கொஞ்சமும் அசரவில்லை தர்ஷன். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வனிதாவுக்கு குட் ஷாட் கொடுத்து வருகிறார்.

நீங்கள் கூறியது போல்

கடந்த வாரம் அபிராமிக்கும் வனிதாவுக்கும் இடையிலான சண்டையின் போதும் கூட தர்ஷன் குறுக்கிட்டு வனிதாவை வாங்கினார். நீங்கள் கோபத்தில் தூக்கில் தொங்கு என்று கூறியது போல் அபிராமியும் கோபத்தில் மீன் மார்க்கெட் என கூறிவிட்டார் என்றார்.

இன்றும் ஒன்டிக்கு ஒன்டி

இதனால் ஆத்திரமடைந்த வனிதா, உன்னை அறிவுரை கேட்டால் மட்டும் சொல்லு வீணாக இந்த விஷயத்தில் தலையிடாதே என தர்ஷன் மீது பாய்ந்தார். இந்நிலையில் இன்று வெளியான புரமோவில் வனிதாவுடன் ஒன்டிக்கு ஒன்டி மல்லுக்கு நிற்கிறார் தர்ஷன்.

என் ஒபினியன்

அதாவது பிக்பாஸ் வீட்டில் நடைபெறும் விளையாட்டில், பாதி விளையாட்டுக்கு பிறகு விதியை மாற்றுகிறார் வனிதா. இதனால் டென்ஷனான தர்ஷன், தனது ஒபினியனை கூறுகிறார். நீங்கள் உங்கள் ஒபினியனை கூறுவது போல் நான் என் ஒபினியனை கூறுகிறேன் என்கிறார்.

மைக்கை கழட்டி எறிந்த வனிதா

அதற்கு வனிதா உன் ஒபினியனை வேறு எங்காவது போய் சொல் என்கிறார். மேலும் பிக்பாஸ் வந்து சொல்லட்டும் அதுவரை விளையாட முடியாது என மைக்கை கழட்டி எறிகிறார் வனிதா.

வாங்கிய தர்ஷன்

தர்ஷனை சமாதானப்படுத்தி அழைத்து செல்கிறார் கவின். அவரிடம் பாதி கேட் விளையாடிய பிறகு ரூல்ஸை எப்படி மாற்றலாம் என பேசுகிறார் தர்ஷன். இப்படியாக இன்றும் வனிதாவை வாங்கு வாங்கென்று வாங்குகிறார் தர்ஷன்.

நிகழ்ச்சியில் விறுவிறுப்பு

யாராவது வனிதாவை எதிர்த்து பேச மாட்டார்களா? அவருக்கு கடிவாளம் போட மாட்டார்களா என ஏங்கிய ரசிகர்களுக்கு தர்ஷனின் பதிலடி மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வனிதா மூக்கு உடைவதால் நிகழ்ச்சியும் விறுவிறுப்படைந்துள்ளது.

இரண்டாவது ப்ரொமோ காட்சியில் தர்ஷன் இன்று செய்த செயலால் அனைத்து போட்டியாளர்களும் தர்ஷன் பக்கத்தில் வந்துள்ளனர். இதில் கடைசியாக ஒரு ரொமான்ஸ் காட்சி வேறு இடம்பெற்றுள்ளது.

81026 total views