வனிதாவையும் சாக்‌ஷியையும் காப்பாற்றிய பிக்பாஸ்.. இந்த முறை இவர் தான் வெளியேறுவாரா?..

Report
1153Shares

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் கடந்த திங்கட்கிழமை அறிவிக்கபட்டது. இந்த வார நாமினேஷனில் வனிதா, சரவணன், மதுமிதா, மீரா, மோகன் வைத்யா இடம்பெற்றனர். வனிதா தான் வெளியேற்றபட வேண்டும் என்று பெரும்பாலான ரசிகர்கள் விரும்பினாலும்.

அவர் இந்த வாரம் கண்டிப்பாக பிக்பாஸால் காப்பாற்றுபட்டுவிடுவார் என்பது கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் கொலைகாரன் டாஸ்கின் மூலம் தெரிந்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வனிதாவை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே, வனிதாவிற்கு மிகவும் சுலபமான டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் வனிதா வெற்றிகரமாக செய்தும் முடித்தார். ஒருவேளை இந்த வெற்றிகரமாக வனிதா வெளியேற்றபடவில்லை என்றால் டாஸ்க்கை சிறப்பாக செய்தற்காக அவருக்கு எதாவது சூப்பர் பவரும் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கபட்டது.

அதே போலவே வனிதாவிற்கும் இந்த வாரம் டாஸ்கை சரியாக செய்ததால் ஒரு சூப்பர் பவராக பிக்பாஸ் அடுத்த வார தலைவர் பதவிக்கு போட்டியிடலாம் என்று கூறியுள்ளனர். அதில் சாக்‌ஷி, வனிதா, மோகன் வைத்தியா இவர்கள் மூவருக்கும் கொடுக்கும் டாஸ்கில் வெற்றி பெறும் நபரே இந்த வார தலைவர் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாஸ்கில் மோகன் வைத்தியா ஒரு வேளை தோல்வியடையும் பட்சத்தில் இந்த வாரம் வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது..

loading...