அம்மாவுடன் போக மாட்டேன்.. மாற்றான் தந்தையுடன் இருக்க முடியாது? வனிதா மகனின் அடுத்த காணொளி

Report
1299Shares

வனிதாவின் மகன் நீதிபதியே சொன்னாலும் நான் என் அம்மாவுடன் போக மாட்டேன் என்று கூறிய காணொளி ஒன்று அண்மையில் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வந்தது.

தற்போது என் மாற்றான் தந்தையுடன் இருக்க விருப்பம் இல்லை என்று கூறிய மற்றொரு வீடியோவையும் தேடிப் பிடித்து பிக்பாஸ் பார்வையாளர்கள் ட்விட்டரில் ஷேர் செய்துள்ளனர்.

பிக் பாஸ் வீட்டிற்கு சென்றால் ஸ்ரீஹரிக்கு தன் மீதான கோபம் தீர்ந்துவிடும் என்று யாரோ வனிதாவுக்கு தவறான ஆலோசனை கொடுத்துள்ளனர்.

பிக் பாஸ் பார்வையாளர்கள் அனைவரிடமும் திட்டு வாங்கும் ஒரே போட்டியாளர் வனிதா தான்.

இது போன்ற காணொளிகளை ஷேர் செய்து, வனிதா மீது ஒரு அம்மாவாக பாவப்பட்டாலும் இந்த நிகழ்ச்சியை பார்த்துவிட்டு ஸ்ரீஹரி மேலும் வெறுக்கத் தான் போகிறார் என்கிறார்கள் பிக் பாஸ் பார்வையாளர்கள்.

வனிதா மீது உள்ள கோபத்தால் அவரின் குடும்ப பிரச்சனை தொடர்பான வீடியோக்களை தேடி எடுத்து சமூக வலைதளங்களில் ஷேர் செய்கிறார்கள் நெட்டிசன்கள்.

நிஜ வாழ்க்கையிலேயே இப்படி இருக்கும் வனிதாவா பிக் பாஸ் வீட்டில் சக போட்டியாளர்களை எப்படி அனுசரித்துப் போகப் போகிறார் என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

42898 total views