தர்ஷனுக்கு ஷெரின் கொடுத்த முத்தம்.. மிரண்டு போன பார்வையாளர்கள்.. இதற்கும் வனிதா தான் காரணமா?

Report
449Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது கொலைகாரன் டாஸ்க் மும்முரமாக சென்றுக் கொண்டிருக்கிறது. இதில், இந்த வாரம் வனிதாவை காப்பாற்றுவதற்கென்றே பிக்பாஸ் இந்த டாஸ்க்கை கொடுத்ததுபோல் உள்ளது. வனிதா மற்றும் முகின் கொலைகாரர்களாக மிகவும் ரகசியமாக விளையாடி வருகின்றனர்.

இன்றைய டாஸ்கில் வனிதா மற்றும் முகினுக்கு மூன்றாவது கொலைக்கான டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் ஷெரின், தர்ஷனுக்கு முத்தம் கொடுக்க வைக்க வேண்டும் என்று டாஸ்க் கொடுக்கப்பட்டது. ஹெரினை அழைத்த வனிதா, உனக்காக தான் தர்ஷன் அனைத்து வேலையையும் செய்து வருகிறார் என்றார்.

பின்னர் கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் தர்ஷனுக்கு முத்தம் கொடு என்றார் வனிதா. பின்னர் ஷெரினோ, தர்ஷனுக்கு குழந்தைக்குகு கொடுப்பதுபோல் முத்தம் கொடுத்தார். ஆனால், அப்போதும் விடாத வனிதா அப்படி எல்லாம் கொடுக்க கூடாது, கையில் கொடு என்றதும் பின்னர் ஷெரின், தர்ஷனின் கையில் முத்தம் கொடுத்தார்.

இதனால் மூன்றாவது டாஸ்கில் வென்றார் வனிதா, என்னதான் டாஸ்க் என்றாலும் பொது மக்கள் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் ஒரு ஆணுக்கு பெண்ணை முத்தம் கொடுக்க சொல்லி டாஸ்க் கொடுப்பது பலருக்கும் வெறுப்பை தான் தந்தது.

கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் செய்ததை பலரும் கழுவி ஊற்றினார்கள். ஆனால், இம்முறை போட்டியாளர்களுக்கு அனைத்திற்கும் வசதியாக டாஸ்க் என்ற பெயரிலேயே முடித்து விடுவாரோ என்ற எண்ணம் தான் தோன்றுகிறது.

14845 total views