ஈழத்து பெண்தான் ஓவியாவா? அடுத்த ஜூலி யார் தெரியுமா? பிக்பாஸ் லீலையால் கவினுக்கு வந்த சோகம்

Report
983Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அபிராமியின் நடவடிக்கை அப்படியே முதல் சீசனில் பங்கேற்ற ஜூலையை போன்றே உள்ளது.

தமிழில் முதல் இரண்டு சீசன்கள் வெற்றி பெற்றதை தற்போது பிக்பாஸ் மூன்றாவது சீசன் தொடங்கியுள்ளது. நாள் தோறும் இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரை ஒளிப்பரப்பாகி வருகிறது பிக்பாஸ் சீசன் 3.

இதில் மொத்தம் 16 பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். இதில் 100 நாட்கள் யார் மக்களின் ஆதரவோடு தங்குகிறார்களோ அவர்களே வெற்றியாளர் என அறிவிக்கப்படுவார்.

இந்நிலையில் 16 பிரபலங்களும் முந்தைய சீசன்களில் பங்கேற்ற பிரபலங்களின் இடத்தை ஈடுசெய்யும் வகையில் உள்ளனர். அந்த வகையில் முதல் சீசனில் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றவர் நடிகை ஓவியா.

இதுவரை அந்த இடத்திற்கு லாஸ்லியா இருப்பார் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். அதேபோல் முதல் சீசனில் மக்களின் அதீத வெறுப்புக்கு ஆளானவர் ஜூலி.

பல நாடகங்களை நடத்தி ஓவியாவை ஓரங்கட்டி ஒரு வழி செய்தார். பொய் சொல்வது, அழுவது, புரணி பேசுவது என ஜூலியிடம் எந்த நல்லப் பழக்கமும் இல்லாமல் இருந்தது.

இதனாலேயே அவர் மக்களின் கோபத்திற்கு ஆளானார். மேலும் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற மறுநாளே நடிகர் ஸ்ரீயிடம் தன்னை கட்டிப்பிடிக்க ஆள் இல்லை எனக்கூறி வருத்தப்பட்டார். ஆரவை காதலிப்பதாக கூறினார்.

இந்நிலையில் அவரது இடத்தை தற்போதைய சீசனில் அபிராமி ரீபிளேஸ் ஆகியுள்ளார்.

கவினை கட்டிப்பிடித்தார், கவினுடன் காதல், ஓவர் ஆட்டிட்டியூட், சண்டை, அழுகை டிராமா, குரூப்பிஸம் என ஜூலிக்கு டஃப் கொடுக்கிறார் அபிராமி.

அது மாத்திரம் இல்லை பிக்பாஸ் இன்று கொடுத்த டாஸ்க்கால் கவினுன் சோகத்தில் உறைந்து விட்டார்.

இதேவேளை, அபிராமி பிக்பாஸ் வீட்டிற்கு வந்த நாள் முதல் இன்று வரை அவர் குறித்த நல்ல அபிமானம் மக்கள் மனதில் வரவில்லை. மாறாக இந்த சீசனின் ஜூலி அபிராமிதான் என அடித்து கூறுகின்றனர் ரசிகர்கள்.

29539 total views