ஆடையில்லாமல் நடித்த அமலாபாலின் ஆடை படத்தின் வடிவேலு வெர்சன்..! வைரலாகும் வீடியோ

Report
701Shares

அமலா பால் நடிப்பில் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் ஆடை பட டீஸரின் வடிவேலு வெர்ஷனை படத்தின் இயக்குனர் ரத்னகுமார் வெளியிட்டுள்ளார்.

ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் நடித்துள்ள திரைப்படம் ஆடை. ஏற்கனவே ஆடை எதுவுமின்றி பேப்பரை சுற்றியபடி அமலாபால் இருக்கும் போஸ்டர் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், அமலாபால் அதை கண்டுகொள்ளவில்லை.

இப்படத்தின் டீசர் கடந்த வாரம் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. அதற்கு டீசரில் அமலாபால் ஆடைகளின்றி தோன்றும் காட்சிகளும் முக்கியக் காரணமாகும். இப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் ‘ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளது. இதனையடுத்து டீசர் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் இந்த டீசரின் வடிவேலு வெர்ஷன் வெளியானது.

இதைப் பார்த்து அசந்த இயக்குனர் ரத்னகுமார் ‘அனைத்துப் படங்களுக்கும் வடிவெல் வெர்ஷன் வெளியாவது போல ஆடை படத்துக்கும் வெளியாகியுள்ளது. வடிவேலு வெர்ஷனின் இந்த ஆடை வீடியோ மிகவும் நகைச்சுவையாக உள்ளது.

இந்த வீடியோவை ஷேர் செய்யாமல் என்னால் இருக்க முடியவில்லை. ஆடை படம், ஆடை சுதந்திரத்தை பற்றி பேச உள்ளது. நான் பேச்சுரிமையை மதிக்கிறேன். என்னை மன்னிக்கவும் அமலாபால் .’ எனத் தெரிவித்துள்ளார்.

23722 total views