பிக்பாஸ் ஃபாத்திமாவை கலாய்த்து மீம் போட்ட நடிகை யாஷிகா ஆனந்த்.. வைரலாகும் புகைப்படம்..!

Report
886Shares

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நேற்று கோலாகலமாக துவங்கியது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான போட்டியாளர்களும் சில பரிட்சியமில்லா போட்டியாளர்களும் கலந்து கொண்டுள்ளனர். அந்த பரிட்சியமில்லா பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக நுழைந்தவர் பிரபல செய்தி வாசிப்பாளரும் நடிகையுமான பாத்திமா பாபு.

நேற்றய நிகழ்ச்சியில் உலகநாயகன் கமல் , பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தே வரவேற்ற போட்டியாளரும் இவர் தான். இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக கலந்து கொண்ட பாத்திமாவை யாஷிகாவுடன் ஒப்பிட்டு பரவி வந்த மீம் ஒன்றை யாஷிகா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டேட்ஸ்ஸாக வைத்துள்ளார்.

அந்த மீமில் கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக யாஷிகா கலந்து கொண்டுள்ளதை மிகவும் மகிழ்ச்சியாகவும், இந்த சீசனில் பாத்திமா முதல் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளதை மிகவும் எரிச்சலாகவும் குறிப்பிடுவது போல அந்த மீம் அமைந்துள்ளது.

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் யாஷிகா ஆனந்த் மிகவும் சர்ச்சைக்குரிய போட்டியாளராக திகழ்ந்து வந்தார். இவர் அணிந்து வந்த ஆடையும் மற்றும் மஹத்துடன் இவர் நடந்து கொண்ட விதமும் மிகுந்த விமர்சனத்திற்கு உள்ளானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

25849 total views