பிக்பாஸ் வீட்டில் திருடிய சாண்டியை அடிக்கச் சென்ற சேரன்.. சிம்பிளாக கலாய்த்த ஜாங்கிரி மதுமிதா..!

Report
912Shares

நேற்று கோலகலமாக துவங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதில் முக்கிய நபர்களாக பாத்திமா பாபு, சேரன் ஆகியோர் அதிக நாட்கள் நீடிக்கலாம் எனவும், ஆனால் இளைஞர்கள் மற்றும் பெண்களின் ஓட்டு கவீன் மற்றும் சாண்டிக்கு தான் என்று சமூகவலைத்தளங்களில் ஒரு போரே சென்று கொண்டிருக்கிறது.

ஆனால், இன்று இவர்கள் இருவரையும், மிஞ்சி விட்டார். மலேசிய இளைஞர் முகேன் ராவ்.

இன்று ப்ளாஷ்மா ட்வி முன்பு ஒவ்வொருவராக நிற்க வைத்து, அவர்களிடம் மற்றவர்கள் கேள்விகளை எழுப்ப அவர் நடித்து காட்ட வேண்டும்.

அதுபோல, மலேசியாவை சேர்ந்த, முகித் ராவ்வை நிற்க வைத்து இவரை யார் அண்ணனாக ஏற்றுக் கொள்வீர்கள் என ஐந்து பெண்களிடம் கேட்கப்பட்டது. ஆனால் யாருமே ஏற்றுக்கொள்ளவில்லை. பின்பு, சட்டென்று ஐந்து பெண்களும் எழுந்து அந்த நபருக்கு மாலை அணிவித்து தூக்கியுள்ளனர்.

பின்னர், சாண்டியை நிற்க வைத்து திருடனாக நடிக்க சொன்ன போது, அவர் திருடனாக நடித்து கொண்டிருக்கும் போது, சட்டென்று கோபமாக எழுந்த சேரன், சாண்டியை இனி திருடுவியா என அடிக்க சென்றார். அனைவரும் மிரண்டு போய் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால், ஜாங்கிரி மதுமிதா சட்டென்று எழுந்து சாண்டியை கலாய்க்க அனைவரும் சிரித்துவிட்டனர்.

27948 total views