பிக்பாஸில் அதிரடியாக சென்ற ஈழத்து பெண் லொஸ்லியா... அதற்குள் ஆர்மியா?.. கொண்டாடும் தமிழர்கள்!

Report
889Shares

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி துவங்கி ஒரு நாள் கூட ஆகாத நிலையில் ட்விட்டரில் ஆர்மிகளை துவக்கி அட்டகாசம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

பிக் பாஸ் முதல் சீசனில் ஓவியாவுக்கு ட்விட்டரில் ஆர்மி துவங்கினார்கள். அதில் இருந்து ஒவ்வொரு சீசனிலும் சில போட்டியாளர்களுக்கு ட்விட்டரில் ஆர்மி துவங்கி அவரின் புகழ்பாடுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள் ரசிகர்கள்.

இந்நிலையில் இந்த சீசன் துவங்கிய கையோடு சாக்ஷி அகர்வால், கவின், லொஸ்லியா, அபிராமி ஆகியோருக்கு ஆர்மி துவங்கிவிட்டார்கள் ரசிகர்கள். அதில் சாக்ஷி, லொஸ்லியா ஆர்மிகள் ஆரம்பத்திலேயே அல்லபறை அதிகமாக செய்கின்றன.

லொஸ்லியா

இப்போதைக்கு லொஸ்லியா ஆர்மி தான் அலப்பறையா செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஏன்யா, தமிழகத்தில் மக்கள் குடிக்க தண்ணீர் இல்லாமல் இருக்கிறார்கள். இந்நிலையில் உனக்கு பிக் பாஸ் நியூஸ், லொஸ்லியா ஆர்மி நியூஸ் கேட்குதா என்று நினைக்கலாம். இப்படி பிக் பாஸ் மற்றும் ஆர்மிகளை பற்றி விளாசுபவர்கள் தான் அதை அதிகம் படிக்கிறார்கள் பாஸ்.

முடியல சாமி

அபிராமி வெங்கடாச்சலத்திற்கு ஒரு ஆர்மியை துவங்கி அவரின் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்துடன் சேர்ந்து நடித்த அபிராமிக்கு தல ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

காமெடி பீஸ்

3வது சீசனில் பிக் பாஸ் வீட்டின் காமெடி பீஸ் சாண்டி தான் போன்று. இன்று காலையில் இருந்து பிக் பாஸ் சாண்டியை தான் டார்கெட் செய்கிறார். ஒரு மாற்றத்திற்காக இம்முறை ஆண் வேட்பாளரை தனது செல்லக்குட்டியாக தேர்வு செய்துவிட்டாரோ பிக் பாஸ்?.

சாக்ஷி ஆர்மி

சாக்ஷி அகர்வாலுக்கும் ஆர்மி துவங்கிவிட்டார்கள். அவரின் சிரிப்பை பார்த்து விழுந்துவிட்டேன் என்று இளசுகள் வெட்கத்தை விட்டு ஒப்புக் கொள்கிறார்கள்.

கவின்

கவினுக்கும் ஆர்மி ஆரம்பித்தாகிவிட்டது. இந்த புகைப்படத்தை பார்த்தால் விஜய் ரசிகர்கள் கண்டிப்பாக வசைபாடுவார்கள். ஆரம்பமே அமர்க்களமாக இருக்கிறதே.

loading...