பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஈழத்தமிழர் இருவர்! மகிழ்ச்சியின் உச்சத்தில் இலங்கையர்கள்

Report
851Shares

பிக்பாஸ் 3 ஆரம்பித்துவிட்டது, இன்று முதல் பிக்பாஸ் ஒளிபரப்பாக உள்ளது. கடந்த இரண்டு முறையும் பட்டிதொட்டியெங்கும் பரவிய பிக்பாஸ் இப்போது மூன்றாவது சீசனுகுள் நுழைந்திருக்கிறது.

சூர்யா, நயந்தாரா, ஆகிய இருவரில் ஒருவர் தொகுத்து வழங்குவார்கள் என எதிர்பார்க்கபப்ட்ட நிலையில் கமலே இந்த சீசனையும் தொகுத்து வழங்க வருகிறார்.

முற்றிலும் மாற்றியமைக்கப்பட்ட செட்டில் இம்முறை அதிக கேமராக்களுடன் 17 போட்டியாளர்களுடன் களமிறங்கியுள்ளனர்.

இந்த 17 போட்டியாளர்களில் இரண்டு இலங்கையர்கள் கலந்து கொள்ளுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த இளம் தொகுப்பாளினியான Losliya பிக்பாஸ் சீசன் – 3 நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டுள்ளார்.

இதேவேளை, யாழ். குடாநாட்டினை சேர்ந்த இளைஞன் ஒருவரும் பிக்பாஸ் சீசன் – 3 நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டுள்ளார்.

மேலும், இலங்கையைச் சேர்ந்த இருவரும் அதுவும் வடக்கு கிழக்கினைச் சேர்ந்த தமிழ் பேசும் இருவர் பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டுள்ளமையால் ஈழத்து ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

அது மாத்திரம் இல்லை பிக்பாஸ் 3 வீடு 5 நட்சத்திர ஹோட்டல் அந்தஸ்தில் மிளிருகின்றது. இது குறித்த புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றன.

29798 total views