5 கோடி கடனுக்கு 100 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் ஏலம்... விஜயகாந்தின் கண்கலங்க வைக்கும் காணொளி!

Report
911Shares

நடிகரும் தே.மு.தி.க கட்சி தலைவருமான விஜயகாந்தின் வீடு மாற்றும் கல்லூரி ஏலத்திற்கு வருவதாக பிரபல வங்கி வெளியிட்ட விளம்பரம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதில் விஜயகாந்தின் கல்லூரியான ஆண்டாள் அழகர் கல்லூரியும் அடக்கம். இந்தக் கல்லூரியை கட்ட தற்போது குடியிருக்கும் தனது வீடு மற்றும் சாலிகிராமத்தில் வேதவல்லி தெருவில் உள்ள மற்றும் மனை ஆகியவற்றை பிணையாக வைத்து கடன் பெற்றுள்ளார் விஜயகாந்த்.

அப்போது பெறப்பட்ட தொகை 5 கோடியே 52 லட்சத்து 73 ஆயிரத்து 825 ரூபாய் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கடன்களை அடைக்க விஜயகாந்திற்கு சொந்தமான 100 கோடி சொத்துக்கள் ஏலத்திற்கு வந்துள்ளது. ஏலம் முடிந்ததும் விஜயகாந்த் வாங்கிய 5 கோடியே 52 லட்சத்து 73, 825 ரூபாய் கடனை வட்டியுடன் விஜயகாந்த் கட்டிவிட்டு மீதமுள்ள தொகையை விஜயகாந்த்திடமே ஒப்படைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆரம்பத்தில் தான் சினிமாவிற்குள் வந்த நிலை என்ன என்பதை காணொளியாக வெளியிட்டுள்ளார். இந்த காட்சி ரசிகர்கள் உட்பட அனைவரையும் அதிர்ச்சியில் ஆழத்தியுள்ளது.