மெத்தையில் படுத்துக்கொண்டு டீவி பார்த்த பாம்பு.. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்..!

Report
677Shares

கடலூர் மாவட்டத்தில் வீட்டுக்குள் புகுந்த நல்லபாம்பு ஒன்று, கட்டிலில் படுத்துக்கொண்டு டி.வி பார்த்துக் கொண்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடலூர் மாவட்டம் சோனாங்குப்பத்தில் வசிப்பவர் பிச்சாண்டி. இவரது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் நல்ல பாம்பு ஒன்று வீட்டிற்குள் நுழைந்தது. பின்னர் ஏர் கூலர் அருகே உள்ள கட்டிலில் படுத்துக்கொண்டு அந்த பாம்பு வீட்டில் ஓடிக்கொண்டிருந்த டீவியை படமெடுத்தபடி பார்த்துக் கொண்டிருந்தது.

இதனைப்பார்த்த பிச்சாண்டியின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து, வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அங்கு வந்த வனவிலங்கு ஆர்வலர், வீட்டில் உள்ள கட்டிலில் படமெடுத்து பார்த்துக் கொண்டிருந்த பாம்பை லாவகமாக பிடித்துச் சென்றார்.

மேலும் யாருக்கும் பாதிப்பில்லாத வகையில் அதனைப் பிடித்து வனப்பகுதிக்குள் விட்டார் வனவிலங்கு ஆர்வலர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

29528 total views