கோவில்களில் புறா வளர்ப்பது எதற்காக தெரியுமா..? முன்னோர்களின் அசரவைக்கும் யோசனையை பாருங்கள்..!

Report
548Shares

இந்தியாவில் பெரும்பாலான பழமையான கோயில்களில் புறாக்கள் இருப்பதை நாம் பார்த்திருப்போம். என்றாவது கோயில்களில் ஏன் புறாக்கள் வளர்க்கப்படுகின்றன என்று யோசித்திருக்கிறோமா..?

அந்த காலத்தில் கட்டப்பட்ட பல கோயில்கள் பிரமாண்டத்துடன், சிற்ப கலைகள் பார்ப்பவர்களின் மனதை கவரும் விதமாகவும், மனதை சாந்தப்படுத்தி அருளும் வல்லமையுடன் கட்டப்பட்டுள்ளது.

இவ்வளவு, சிறப்புமிக்க கோயில்களை பராமரிப்பதன் பொருட்டே கோயில்களில் புறாக்கள் வளர்க்கப்படுகி்ன்றன.

புறா எப்படி, கோயிலை பராமரிக்கும், அது அசுத்தம் தானே செய்யும் என்று நீங்கள் யோசிப்பது தெரிகிறது.

அதாவது, பொதுவாக புறாக்கள் கூடுகட்டி வாழத்தெரியாது என்பதால் கோயில்களில் தஞ்சமடைவது உண்டு. புறாக்கள் கோயிலில் இருந்தால் சிலந்திகள் கூடு கட்டாது. அதனால் ஒட்டடை ஏற்படாது.

அதுபோல, வீட்டில் பிரச்சனையை ஏற்படுத்தும் கரையான்களும், கருவண்டுகளும் கோபுரத்தை தாக்காது. அப்படி அது வந்தாலும், புறாக்களுக்கு இரையாகிவிடும்.

கோயில்களில் வவ்வால்கள், ஆந்தைகள் வராது. புறாக்கள் எழுப்பும் சப்தம் இவைகளை விரட்டிவிடும்.

அதோடு புறாக்கள் எழுப்பும் சப்தம் மனிதர்களுக்கு நோயை குணப்படுத்தும் வல்லமை மிக்கது.

இதனால் தான் வெளிநாட்டவர் நம் முன்னோர்களின் அறிவாற்றலை எண்ணி வியக்கின்றனர். முன்னோர்கள் கட்டிய இப்படிப்பட்ட கோயில்களை பொக்கிஷமாக காப்பது நமது கடமை.

17639 total views