ஆற்றுக்குள் போன சிறுமியை மீட்டு வந்த நாய்.. இணையத்தில் பார்வையாளர்களை வியக்க வைத்த காணொளி..!

Report
1194Shares

சிறுமி ஒருவர் ஆற்றங்கரையோரம் பந்தை வைத்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது தவறுதலாக பந்து ஆற்றில் விழுந்தது. இதையடுத்து நதிக்கரையில் நின்று பந்தை எடுக்க அந்த சிறுமி முயன்றார்.

இதைக்கண்ட அந்த சிறுமியின் நாய், வேகமாக ஓடி வந்து சிறுமியை பிடித்து இழுத்து கரையில் போட்டது. அதுமட்டுமின்றி ஆற்றில் இறங்கி பந்தையும் எடுத்து வந்து அந்த நாய் கொடுத்தது.

இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை எனினும், வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.