திருமணத்திற்கு தாலி, புடவை கூட வாங்காத வைஷ்ணவி... அந்த பணத்தை என்ன செய்கிறார் தெரியுமா?

Report
789Shares

பிக் பாஸ் பிரபலம் வைஷ்ணவி தனது திருமணத்தை எளிமையாக நடத்தி சேமித்த பணத்தை எதற்காக பயன்படுத்துகிறார் தெரியுமா?.

பிக் பாஸ் 2 நிகழ்ச்சி மூலம் பிரபலமான வைஷ்ணவி. அஞ்சன் என்கிற விமானியை 3 ஆண்டுகளாக காதலித்து, இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 15ம் திகதி மிகவும் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டனர்.

பெரும்பாலான பிரபலங்கள் வீட்டில் திருமண நிகழ்வு என்றாலே ஆடம்பர செலவுகள் அதிகமாகவே இருக்கும். தங்கம், வைரம், பட்டு என அடுக்கிக்கொண்டே செல்லலாம். ஆனால் பிக்பாஸ் வைஷ்ணவி திருமணத்திற்காக பெரும் தொகையை செலவு செய்யவில்லை. மாறாக பாட்டியின் புடவையை அணிந்து கவரிங் நகைகள் போட்டு தாலி கட்டாமல் மாலை மட்டும் மாற்றிக் கொண்டுள்ளார். வைஷ்ணவியின் எளிமையை பார்த்து நெட்டிசன்களும், பெண்ணை பெற்றவர்களும் அவருக்கு வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

மேலும் வைஷ்ணவியும், அஞ்சனும் பட்டுப்புடவை, தாலி இதற்கெல்லாம் செலவு செய்யாத பணத்தினை விலங்குகள் நலனுக்காக பயன்படுத்தப் போகிறார்களாம்.

இவர்களைப் போன்றே அனைவரும் எளிமையாக திருமணம் செய்து கொண்டால் பெண்ணை பெற்றவர்கள் பலர் கடனில் சிக்கித் தவிக்க மாட்டார்கள். ஒரு நாள் கூத்துக்காக பெரிய தொகையை கடன் வாங்கிவிட்டு கஷ்டப்படும் தந்தைகள் வைஷ்ணவி, அஞ்சனை மனதார பாராட்டுகிறார்கள். அதிலும் முக்கியமாக போட்டோகிராபரை அழைக்காமல் திருமணத்திற்கு வந்தவர்களே இந்த புகைப்படங்களையெல்லாம் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் முடிந்த பிறகு ஏதாவது ஒரு நாட்டிற்கு தேனிலவு சென்ற புகைப்படத்தினை வெளியிடாமல் நாய்க்கு உணவு அளிக்கும் வீடியோவை தான் வெளியிட்டுள்ளார். இந்த செயல் ரசிகர்களை மேலும் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

26527 total views