பிக்பாஸ் ஜூலி வெளியிட்ட புதிய புகைப்படம்... தாறுமாறாக கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

Report
875Shares

தமிழகத்தில் வரலாற்று சிறப்புமிக்க போராட்டமாக கருதப்பட்ட ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வீரத் தமிழச்சி என்று பெயர் எடுத்தவர் ஜூலி. ஆனால், விஜய் தொலைக்காட்சியில் நடந்த 2017 ஆம் விஜய் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றதற்கு பின்னர் இவரது நல்ல பெயர் அனைத்தும் அப்படியே ரிவர்ஸ் ஆகி விட்டது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் அரங்கேற்றிய பல நாடகத்தால் இவருக்கு பல ஹீட்டர்ஸ்கள் உருவாகிறார்கள். இவரைப் பற்றிய எந்த செய்திகள் வந்தாலும் இவரை சமூகவலைதளத்தில் வறுத்து எடுத்து வந்தனர். ஆனால், அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் ரியாலிட்டி ஷோ, சினிமா என்று பிஸியாக இருந்து வருகிறார் ஜூலி.

அதேபோல அவரது ஹேட்டர்ஸ்களும் குறைந்தபாடில்லை. இவர், என்ன பதிவிட்டாலும் அதனை கலாப்பதற்கு என்று ஒரு கூட்டம் இருந்து கொண்டு தான் வந்தது. இதனால் ஆத்திரமடைந்த ஜூலி சமீபத்தில் ‘நான் என்ன தவறு செய்தேன் எதற்காக இப்படி திட்டுகிறீர்கள்’ என்று ஒரு வீடியோ ஒன்றை கூட வெளியிட்டு இருந்தார்.

அந்த வீடியோ சமூக வளையதலத்தில் வைரலாக பரவியது.

அதன் பின்னர் கூட ஜூலியை கிண்டலப்பதை மட்டும் ரசிகர்கள் நிறுத்தியபாடில்லை.சமீயத்தில் ஜூலி தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் ‘எனக்காக நான் வாழ்கிறேன்’என்று குறிப்பிட்டிருந்தார். இதனை கண்ட ட்விட்டர் வாசிகள் வழக்கம் போல ஜூலியை கிண்டலடிக்க துவங்கிவிட்டனர். அதே போல அந்த பதிவில் நயன்தாரா தனது கையில் பச்சை குத்திக்கொண்டிருக்கும் ‘Positivity’ என்ற ஹேஷ் டேக்கையும் பயன்படுத்தியுள்ளார் ஜூலி.

28041 total views