மீண்டும் ஹனிமூன் புகைப்படத்தை வெளியிட்டு.. ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விக்னேஷ் சிவன்..!

Report
896Shares

தமிழ் சினிமாவில் தற்போதைய ஹாட் காதல் ஜோடி நயன்தாரா - விக்னேஷ் சிவன் தான். இவர்கள் இருவரும் காதலிப்பது மட்டுமல்லால் சேர்ந்து அடிக்கும் லூட்டிகளை அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் பதிவேற்றம் செய்துவிடுவார்கள்.

இவர்கள் இருவரும் சேர்ந்து செய்யும் அளப்பறைகளை பார்க்கும் சமூக வலைதளவாசிகள் சிங்கிள் பசங்க சாபம் உங்களை சும்மா விடாது என கடுப்பாகின்றனர். அந்த அளவிற்கு லூட்டியடிக்கும் இந்த ஜோடி புறாக்கள் திருமணத்தை பற்றி மூச்சு விடாமல் கமுக்கமாக இருக்கிறார்கள்.

ஆனால் ஊர்சுற்றும் நெருக்கமான புகைப்படங்கள் மட்டும் அவ்வப்போது வெளியாகி பலரையும் புகைய வைத்துவிடுகிறது.

மேலும் இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் லிவிங் டுகெதர் முறையில் வசிப்பதாகவும் செய்தி வெளியாகி கோலிவுட்டில் கிசு கிசுக்கப்பட்டது. அடிக்கடி டேட்டிங் செல்லும் இவர்கள் தற்போது காதல் ஜோடிகளின் முக்கிய சுற்றுலாத்தளமாக பார்க்கப்படும் சாண்டோரினி நகரில் இருவரும் ஜோடியாக வலம் வருகின்றனர். இந்த நகரம் புதுத்தம்பதிகள் ஹனிமூன் செல்லும் முக்கிய நகரமாக இருந்து வருகிறது.

இளசுகளின் கனவு கன்னியான நயன்தாராவுடன் விக்னேஷ் சிவன் சேர்ந்து ஊரசுற்றும் புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் கடுப்பாகி கண்டபடி அவரை கரித்துக்கொட்டிய நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் நயன்தாராவின் அழகிய புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

மேலும் ஏற்கனவே ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த இவர்கள் தற்போது மற்றொரு புகைப்படத்தையும் வெளியிட்டு ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்கள்...

35647 total views