திருமணத்திற்கு முன்னரே கர்ப்பமான நடிகைகள் யார் யார் தெரியுமா?.. இவர்கள் எல்லாம் தான்..!

Report
1024Shares

சினிமா துறையில் இருப்பவர்களைப் பற்றி நாளுக்கொரு வதந்திகளும் கிசுக்கிசுக்களும் வந்து கொண்டே தான் இருக்கும். அவர்கள் இருமினால், தும்மினால், சாப்பிட்டால், சாப்பிடாமல் என அவர்கள் பண்ணும் அத்தனையும் செய்தியாகிவிடும். அதிலும் காதல் விஷயத்தில் அவர்கள் ஏதாவது ஈடுபட்டால் அவ்வளவு தான்.

பொதுவாக சினிமாக்காரர்கள் என்றாலே அவர்களுக்கு என்று பிரைவசி, சொந்த விஷயங்கள் என்று எதுவுமே வைத்துக் கொள்ள முடியாது. எல்லா பக்கங்களிலும் ஆயிரம் கண்களை அவர்களையே பார்த்துக் கொண்டிருப்பார்கள். அதிலும் நடிகைகள் என்றால் சொல்லவே வேண்டாம். அப்படி பாலிவுட்டில் திருமணத்துக்கு முன்பாகவே கர்ப்பமான நடிகைகளைப் பற்றித் தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.

மோனா ஆம்பிகோன்கர் (Mona Ambegaonkar)

சிஐடி துறை சார்பாக நடத்தப்பட்ட சிஐடி புலனாய்வுத் தொடரில் சோனி தொலைக்காட்சியில் தயானந்த் ஷெட்டியுடன் இணைந்து நடித்தவர் தான் இந்த மோனா. இவர் தன்னுடைய திருமணத்துக்கு முன்பாகவே கர்ப்பமாக இருந்து பெரிய பரபரப்பை ஏற்படுத்தியவர்.

நீனா குப்தா (Neena Gupta)

நீனா குப்தா வெஸ்ட் இந்தியன் கிரிக்கெட் வீரர் விவியன் ரிச்சர்டு அவர்கள் மீது பெரும் ஈர்ப்பும் காதலும் கொண்டிருந்தார். அப்போது திருமணத்துக்கு முன்பாகவே கர்ப்பமாக இருந்தார். அதன்பின் சில மாதங்களில் அவருடைய மகளான மசாபா பிறந்தார்.

சரிகா (Sarika)

சரிகா யார் என்று நம் எல்லோருக்குமே நன்கு தெரியும். கமலஹாசனின் மனைவி. கமலஹாசனுக்கும் சரிகாவிற்கும் இருந்த உறவு மிக அதிக அளவில் பேசப்பட்டது. இருவரும் லிவ்விங் டுகெதராக வாழ்ந்து வந்தனர். அப்போது திருமணத்துக்கு முன்பாகவே கர்ப்பம் அடைந்தார். சில மாதங்களிலேயே நம்ம ஸ்ருதிஹாசன் பிறந்தார்.

அம்ரிதா அரோரா (Amrita Arora)

அம்ரிதா அரோரா தன்னுடைய காதலர் ஷகீலுடன் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டார்கள். அறிவித்து ஒரு சில மாதங்களிலேயே ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தார்.

செலீனா ஜெய்ட்லி (Celina jaitly)

செலீனா ஜெய்ட்லி தான் காதலித்து வந்த காதலரான பீட்ட ஹெக்ஜை 2011 ஆம் ஆண்டு ஜூலை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அதையடுத்த மார்ச் மாதத்திலேயே இரட்டைக் குழந்தைகளுக்குத் தாயானார். அதாவது திருமணத்தின் போது இவர் மூனறு மாதம் கர்ப்பமாக இருந்திருக்கிறார்.

மகிமா சௌத்ரி (Mahima Chaudhry)

மகிமா சௌத்ரி பாபி முகர்ஜி என்பவரைக் காதலித்து வந்திருக்கிறார். இவர்களுடைய திட்டமிடப்படாத கர்ப்பத்தின் காரணமாக உடனடியாக 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள் இருவரும்.

வீணா மாலிக் (Veena Malik)

எப்போதுமே முரண்பாடுகளிலும் சர்ச்சைகளிலும் சிக்கிக் கொள்கிற வீணா மாலிக் இந்த விஷயத்திலும் சும்மா இருப்பாங்களா? ஆமாங்க. கல்யாணத்துக்கு முன்னாடியே கர்ப்பமான பாலிவுட் நடிகைகளில் இவரும் ஒருவர்.

அனோஷ்கா சங்கர் (Anoushka Shankar)

அனோஷ்கா சங்கர் பிரிட்டிஷ் பிலிம் மேக்கரான ஜோய் ரைட்டருடன் டேட்டிங்கில் ஈடுபட்டு வந்தார். அவர்களுக்கு இடையிலான உறவினால் 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கர்ப்பமானார். அதையடுத்து சில மாதங்களில் அவர்களுடைய திருமணம் நடந்தேறியது.

கொங்கோனா சென் ஷர்மா (Konkona Sen Sharma)

கொங்கோனா சென் ஷர்மா தன்னுடன் இணைந்து நடித்த ரன்வீர் சோரியை 2010 ஆம் ஆண்டு ரகசியத் திருமணம் செய்து கொண்டார். 2011 ஆம் ஆண்டு தங்களுடைய முதல் குழந்தை பிறந்த பின்னர் தான் தங்கள் இருவருக்கும் திருமணம் நடந்ததை வெளியில் அறிவித்தார்கள்.

ஸ்ரீதேவி (Sridevi)

போனி கபூரை ஸ்ரீதேவி திருமணம் செய்து கொள்ளும் போது, கிட்டதட்ட 7 மாத கர்ப்பமாக இருந்தார். 1996 ஆம் ஆண்டு இவர்களுக்குத் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து சில மாதங்களிலேயே அவர்களுடைய முதல் மகளான ஜான்வி பிறந்து விட்டார்.

எமி ஜாக்சன் (Ami jackson)

நடிகை எமி ஜாக்சன் லண்டனை சேர்ந்த ஜார்ஜ் பெனாய்டோ என்ற தொழிலதிபரைக் காதலிப்பதாக அறிவித்தார். அதன் பின்னர் இவர்கள் நிச்சயத்திற்க்கு முன்னரே 22 மாத கர்ப்பமாக இருப்பதாக எமி தன இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அண்மையில் புகைப்படம் மற்றும் வீடியோ மூலம் தெரிவித்து வந்தார்..