ஷியாமின் முன்னாள் காதலி செம்பருத்தி சீரியல் சபானாவா?... வெளியேறியதற்கு உண்மையான காரணம் இதோ!

Report
4026Shares

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியல் என்றாலே ரசிகர் பட்டாளம் அதிகம் தான். அந்த அளவிற்கு ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டிப்பேட்டு வைத்தள்ளது என்றே கூறலாம்.

இந்த சீரியலில் கதாநாயகன் ஆதிக்கு நண்பனாக ஷியாம் நடித்திருப்பார். அதில் அங்கு அகிலாண்டேஷ்வரியிடம் வேலை செய்யும் பெண்ணை காதலிப்பதும் போன்றும் இவரது கதாபாத்திரம் அமைந்திருந்தது.

பல கஷ்டங்களைக் கடந்த மிக நல்ல நடைமேடையாக அடைந்த இந்த சீரியலில் மிக அழகாகவே ஷியாம் நடித்துள்ளார். தற்போது இந்த சீரியலிருந்து அவர் வெளியேற்றப்பட்டுள்ளார்.

இதனால் அதிருப்தியில் இருந்த ரசிகர்கள் ஷியாம் இந்த சீரியலை விட்டுச் சென்றுவிட்டார் என்று தவறாக நினைத்து அவரை உரிமையாக சத்தம் போட்டு பல கருத்துகளை வெளியிட்டிருந்தனர்.

ஆனால் உண்மையான காரணம் என்ன என்பதை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். தானாக இந்த சீரியலில் இருந்து விலகவில்லை என்றும் இது எனக்கு பிடித்தமான சீரியல் என்றும் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி தற்போது வேறொரு ரிவி சேனலில் சந்திரலேகா என்ற சீரியலில் தற்போது புதிய எண்ட்ரி கொடுத்துள்ளார். இந்த வாய்ப்பினை ஏற்றுக்கொள்வதற்கு முன்பே செம்பருத்தி சீரியலில் இருந்து நான் வரமுடியாது என்று கூறிதான் இந்த சீரியலில் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

சந்திரலேகா சீரியலில் எனது கதாபாத்திரம் ஒளிபரப்பப்பட்ட மறுநாளே எனக்கு ஒரு போன் கால் வந்தது.. நீங்கள் செம்பருத்தி சீரியலுக்கு வேண்டாம்... வேறொரு நபரை நாங்கள் எடுத்துள்ளோம் என்று கூறியுள்ளதைக் கேட்டு ஷியாம் மிகவும் அதிர்ச்சியடைந்ததாகவும், அதனால் நான்கு நாட்கள் மிகவும் சிரமப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

கடைசியாக ரௌடி பேபி என்ற சுற்றில் விளையாட்டாக கேள்விகள் கேட்கப்பட்டது. இதற்கும் ஷியாம் தனது பாணியில் மிக அழகாக பதிலளித்துள்ளார். ஆனால் முதல் கேள்வியே அவருக்கு சற்று தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.

செம்பருத்தி சீரியலில் நீங்க காதலித்த சபானா தான் உங்களது உண்மையான முன்னாள் காதலி என்று நீங்கள் ட்விட்டர் பக்கத்தில் பகிரங்கமாக வெளியிட்டுள்ளதாக கேள்விகள் கேட்கப்பட்டது.

அதற்கு ஷியாம் அவரது பாணியில் ஆம் தான் காதலித்தது உண்மை தான் என்றும் 5 ஆண்டுகளாக காதலித்ததாகவும், அதிகமாக இருவரும் கோவிலுக்கு சென்றுள்ளதாகவும் ஷியாம் விளையாட்டாக கூறியுள்ளார்.

loading...