வெளிநாட்டு நபருடன் மிகவும் நெருக்கமாக நடனமாடிய நடிகை சாய்பல்லவி..!

Report
590Shares

தமிழ் சினிமாவில் கரு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. இவர் மாரி 2 படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்திருந்தார். நடிகை சாய் பல்லவி மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் படத்தில் டீச்சராக நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானார். அவருக்கு என பெரும் ரசிகர்கள் உருவாகினர்.

அதனை தொடர்ந்து சாய்பல்லவி மலையாளம், தெலுங்கு, தமிழ் என அனைத்து மொழிகளிலும் கால்தடம் பதித்தார். மேலும் இவர் நடிப்பில் மட்டுமின்றி நடன திறமையும் கொண்டுள்ளார்.

இந்நிலையில் சாய்பல்லவி தற்போது சூர்யாவுக்கு ஜோடியாக செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் NGK என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வரும் மே 31 ஆம் தேதி வெளிவர உள்ளது.

இந்நிலையில் சாய்பல்லவி சில வருடங்களுக்கு முன்பு போட்டி ஒன்றில் இவர் வெளிநாட்டு வாலிபர் ஒருவருடன் மிக நெருக்கமாக நடனமாடிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது. இதனை கண்ட ரசிகர்கள் அவரது நடனத்திற்கு வாழ்த்து கூறியும் சிலர் எதிர்மறையாக விமர்சனம் செய்தும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

17751 total views