ஒரு கச்சேரிக்கு மட்டும் செந்தில் ராஜலட்சுமி எவ்வளவு லட்சம் சம்பளம் வாங்கிறார்கள் தெரியுமா?.. அவர்களே கூறிய தகவல்..!

Report
2266Shares

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான தம்பதிகள் செந்தில் கணேஷ், ராஜலட்சுமி தம்பதியினர். இவர்களுடைய சிறப்பே கிராமிய பாடல்கள்தான். இவர்களுக்கு உலகம் முழுவதிலும், ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்தது.

இறுதியில் செந்தில் கணேஷ் சூப்பர் சிங்கர் பட்டத்தையும் வென்றார். தற்போது இந்த ஜோடிகள் தமிழகம் மற்றும் இன்றி, வெளிநாடுகளிலும் மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்க தொடங்கிவிட்டனர். மேலும் சினிமா படங்களிலும் நடித்தும், பாடியும் வருகின்றனர்.. அண்மையில் கூட வெளியான சின்ன மச்சான் பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது..

இதைத்தொடர்ந்து இவர்கள் அதிக சம்பளம் கொடுத்தால் தான் பாடுவார்கள் என்று ஒரு தகவலும் வெளியானது.. இதற்கு பதிலளித்த இவர்கள் ஒரு பாட்டு கச்சேரிக்கு நாங்கள் வாங்கும் சம்பளம் ஒரு லட்சம் தான்.. அது முழுவதும் எங்களுக்கு மட்டுமில்லை எங்களுடன் பாடும் கலைஞர்கள் மற்றும் வாசிப்பவர்கள் என மொத்த குழுவிற்க்கும் சேர்த்து தான் அவ்வளவு சம்பளம் என ஒரு பேட்டியில் கூறியுள்ளார்கள்...

loading...