ஆசை ஆசையாய் திரையில் பெண் வேடம் ஏற்ற தமிழ் நடிகர்கள் யார் யார் தெரியுமா? பார்த்த ஷாக் ஆகிடுவீங்க...!

Report
336Shares

திரையில் பெண் வேடம் போட்டு நடிக்க விரும்பி ஏற்றுக் கொண்ட தமிழ் நடிகர்களை பற்றி தான் நாம் இந்த தொகுப்பில் முழுமையாக அறிந்து கொள்ளுங்கள்.

சரத் குமார்!

கட்டபொம்மன் என்ற திரைப்படத்தில் கல்யாண மண்டபத்தில் ஆள்கடத்தும் காட்சியில், கவுண்டமணியுடன் அய்யர் மாமி போல பெண் வேடமிட்டு காமெடி காட்சிகளில் நடித்திருப்பார் சரத் குமார்.

சந்தானம்!

ஆல் இன் ஆல் அழகுராஜா திரைப்படத்தில் காமெடி காட்சிகளில் பெண் வேடமிட்டு நடித்திருப்பார் சந்தானம்.

விஜய் சேதுபதி!

சூப்பர் டீலக்ஸ் என்ற படத்தில் பெண் வேடம் ஏற்று நடித்துள்ளார் விஜய் சேதுபதி.

சிவகார்த்திகேயன்!

ரெமோ திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷை தன் காதல் வலையில் விழ வைக்க நர்ஸ் போல பெண் வேடமிட்டு படம் முழுக்க நடித்திருப்பார் சிவகார்த்திகேயன்.

விஜய்!

பிரியமானவளே திரைப்படத்தில், ஜூன், ஜூலை மாதத்தில் என்ற பாடலில் சிறு காட்சியில் பெண் வேடமிட்டு நடனம் ஆடியிருப்பார் விஜய்.

சூர்யா!

அயன் திரைப்படத்தில் ஆரம்ப பாடலில், ஒரு சிறிய காட்சியில் சில நொடிகளுக்கு சிவாஜி படத்தில் ஸ்ரேயா உடுத்தியது போன்ற கவர்ச்சி காஸ்ட்யூம் உடுத்தி பெண்வேடத்தில் தோன்றி இருப்பார் சூர்யா.

ரஜினி!

பணக்காரன் திரைப்படத்தில், நூறு வருஷம் என்ற பாடலில் ரஜினி ஒரு குறிப்பிட்ட காட்சிக்கு பெண் வேடம் இட்டு தோன்றி இருப்பார்.

வடிவேலு!

தமிழில் அதிக முறை பெண் வேடமிட்டு ரசிகர்களிடம் கைத்தட்டும், மறக்க முடியாத இடமும் பெற்றவர் வைகை புயல் வடிவேலு.

விவேக்!

குரு என் ஆளு திரைப்படத்தில் எம்.எஸ் பாஸ்கரை ஏமாற்ற விவேக் பெண் வேடமிட்டு காதலிப்பது போல நடித்திருப்பார்.

விக்ரம்!

கந்தசாமி திரைப்படத்தில் குறிப்பிட்ட ஒரு காட்சியில், பெண் வேடமிட்டு வந்து பயமுறித்தி சென்றிருப்பார் விக்ரம்.

விஷால்!

அவன் இவன் திரைப்படத்தில் நடிப்பில் பேரார்வம் கொண்டவராய் நடித்த விஷால், துவக்க பாடலில் பெண் வேடமிட்டு நடனம் ஆடி இருப்பார்.

சத்யராஜ்!

மாமன் மகள் திரைப்படத்தில், மீனாவை ஏமாற்ற, சத்யராஜ்க்கு அம்மா போல பெண் வேடமிட்டு காமெடி காட்சியில் நடித்திருப்பார் சத்யராஜ்.

பிரகாஷ் ராஜ்!

அப்பு என்ற திரைப்படத்தில் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வரும் பெண் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார் பிரகாஷ் ராஜ்.

பிரசாந்த்!

ஆணழகன் என்ற படத்தில், வீடு வாடகைக்கு பெறுவதற்காக குடும்பம் போல நடிக்க, மனைவி போல பெண் வேடமிட்டு நடித்திருப்பார் பிரசாந்த்.

கமல்!

அனைவரும் இளம்பெண் போல வேடமிட்டு வந்த காலத்தில், அவ்வை சண்முகி திரைப்படத்தில் ஒரு நடுவயது பெண்ணாக வேடமிட்டு அசத்தி இருப்பார் கமல்.

loading...