கனடாவில் வாழும் ஈழ சிறுமி சின்மயி இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா? அவரே வெளியிட்ட புகைப்படம்... குவியும் லைக்ஸ்

Report
3057Shares

கனடாவில் வாழும் ஈழ சிறுமியான சூப்பர் சிங்கர் சின்மயி அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அதனை பார்த்த ரசிகர்கள் சிறுமி சின்மயியா இவர் என்று ஆச்சரியப்பட்டுள்ளனர். அது மாத்திரம் இன்றி மிஸ் யூ என்றும் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

அண்மையில் நடந்து முடிந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஈழ சிறுமியான சின்மயி வெற்றி பெற வில்லை என்றாலும் மக்கள் மத்தியில் நீங்காத இடத்தினை பிடித்திருந்தார்.

ஈழத்தின் இளவரசியாய் மக்கள் மத்தியில் பார்க்கப்பட்டார். கனேடிய மண்ணில் வளர்தாலும்கூட ஆங்கில உச்சரிப்பு சிறிதுமே கலக்காமல் தமிழை மிகத் தெளிவாக உச்சரித்துப் பாடக்கூடிய திறமை சின்மயியிடம் இருக்கின்றது.

இந்நிலையில் அவரின் புகைப்படத்தினை பார்த்த பலர் அவரின் திறமைகளை தொடர்ந்தும் வளர்த்து கொள்ள வேண்டும் என்றும், ரசிகர்களின் ஆதரவு என்றும் இருக்கும் என்றும் கூறியுள்ளனர்.

இதேவேளை, அவர் வெளியிட்ட புகைப்படமும் சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.

101756 total views