பிக்பாஸ் 3 ல் கலந்து கொள்ளும் 90 எம்எல் பட நடிகை.. யார் தெரியுமா? வெளியான தகவல்..!

Report
327Shares

ஓவியாவின் நடித்த 90 எம்எல் பட நடிகை ஸ்ரீ கோபிகா, விரைவில் தொடங்கவுள்ள பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ளவுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா நடிப்பில் வெளியான படம் 90 எம்எல். இரட்டை அர்த்தம் கொண்டதாக வெளியான இப்படம் ரசிகர்களிடையே போதுமான வரவேற்பு பெறவில்லை. இப்படத்திற்கு கண்டனங்களும், விமர்சனங்களும் எழுந்தன.

பல பிரச்சனைகளை சந்தித்த பிறகு தான் படம் வெளியானது. அந்தப்படத்தில் நடித்த ஐந்து பெண்கள் படம் முழுவதும் மது அருந்தும் காட்சிகளில் நடித்திருந்தது, ஆபாச காட்சிகள் மற்றும் வசனங்கள் தான் பலரும் விமர்சிக்க காரணமானது.

அந்த படத்தில் முக்கிய ரோலில் நடித்த ஸ்ரீ கோபிகா, பிக்பாஸ் 3 சீசனில் போட்டியாளராக கலந்து கொள்ளப் போகிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வரும் ஜூன் முதல் வாரம் அல்லது 23ம் தேதி பிக் பாஸ் சீசன் 3 தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

12268 total views