கமலுக்கு போட்டியாக ஆக்‌ஷன் சூப்பர்ஸ்டாரில் களமிறங்கிய பிக்பாஸ் கணேஷ் வெங்கட்ராமன்..!

Report
265Shares

விஜய் தொலைக்காட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் என்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது இந்த பெரும் மூன்றாவது சீசன் விரைவில் துவங்க இருக்கிறது.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை போலவே ஜெயா தொலைக்காட்சியில் ‘ஆக்ஷன் சூப்பர் ஸ்டார்’ என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி துவங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 12 பெண்கள் போட்டியிடுகின்றனர். மேலும், இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பது பிக் பாஸ் கணேஷ் வெங்கட்ராமன் தான்.

நடிகரான கணேஷ் வெங்கட்ராமன், த்ரிஷா நடிப்பில் வெளியான ‘அபியும் நானும்’ படத்தில் த்ரிஷாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன் பின்னர் பல்வேறு திரைப்படங்களில் நடித்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

11039 total views