ஜாங்கிரி மதுமிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள காரணம் இது தானாம்..!

Report
330Shares

விஜய் டிவியில் இன்னும் சில மாதங்களில் ஒளிபரப்பாக உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஜாங்கிரி மதுமிதா பிக் இந்த நிகழ்ச்சிக்கு முதல் போட்டியாளராக செல்கிறார் என்ற செய்தி கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு உறுதி செய்யப்பட்டது.

கடந்த இரண்டு சீசன்களை போல இந்த சீசனையும் கமல் தான் தொகுத்து வழங்க இருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனுக்கான இரண்டு ப்ரோமோகள் வெளியானதிலிருந்தே இந்த நிகழ்ச்சியில் கடல்ந்துகொள்ளப்போகும் போட்டியாளர்கள் யார் என்ற கேள்வி இருந்து கொண்டு வந்தது.

இந்த நிலையில் சில மாதத்திற்கு முன்னர் தன்னுடைய உறவினரும் உதவி இயக்குனரான மோசஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் முடிந்து சில மாதத்திலேயே எப்படி கணவரை பிரிந்து மதுமிதா 100 நாட்கள் இருப்பார் என்று மதுமிதாவின் உறவினர் வட்டாரத்தில் கேட்கபட்ட போது, மதுமிதாவிற்கு சவாலான விஷயம் என்றால் மிகவும் பிடிக்கும். இந்த மாதிரி வாய்ப்பை சவாலாக எடுத்து செய்யலாம் என்று நினைக்கிறார். அதுவும் இது போன்ற வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்காது. பொதுவாக வர வாய்ப்பை தவறவிடக்கூடாது என்று மதுமிதா நினைப்பதாக கூறியுள்ளனர்.

மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் இரண்டு சீசன்களில் கலந்து கொள்ள மதுமிதாவுக்கு அழைப்பு வந்ததாகவும். ஆனால் பல்வேறு காரணங்களால் அப்போது மதுமிதாவால் கலந்துகொள்ள முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

loading...