31 வயதாகியும் திருமணம் செய்யாதது ஏன்?... பிரபல நடிகை கூறிய காரணம்!

Report
695Shares

நடிகை சார்மி கவுர் 1987ஆம் ஆண்டு மும்பையில் மஹாராஷ்டிராவில் பிறந்தவர். இவர் தனது 15 வயதில் இருந்தே ஹீரோயினாக நடித்து வருகிறார். 2002ம் ஆண்டு நீ தோடு காவாலி என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார்.

அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் 100க்கும் மேற்ப்பட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். தமிழில் சிம்பு நடித்த கடந்த அழிவதில்லை படத்தில் நடித்தார். மேலும் ஆஹா அப்படித்தான், லாடம் ஆகிய படங்களில் நடித்தார்.

வாய்ப்புகள் குறைந்து போன பின்னர் படங்களில் நடிப்பதை நிறுத்தி பூரி ஜெகனாத்துடன் இணைந்து தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்.

தற்போது சார்மி அவர்களுக்கு 31 வயது கடந்துவிட்டது. அவரிடம் இன்னும் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை என்று கேட்டால், அதற்கு அவர் ‘இப்பொழுது எனது முழு கவனம் சினிமாவில் மட்டுமே உள்ளது. திருமணம் செய்த பிறகு கணவர், குழந்தை இவர்கள் மீது கவனம் செலுத்த முடியாது’ என்று பதிலளித்துள்ளார்.

loading...