பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் இணைந்த குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய இளம் நடிகர்.. வெளியான அடுத்த தகவல்..!

Report
392Shares

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்றாக திகழ்ந்து வருவது பிக் பாஸ் நிகழ்ச்சி. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது ஒளிபரப்பாகி விரைவில் துவங்க இருக்கிறது. சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் promo வீடியோ ஒன்றும் வெளியாகி இருந்தது.

இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற பல்வேறு பிரபலங்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும், இந்த நிகழ்ச்சியில் பங்குபெறப் போகும் போட்டியாளர்களை பற்றிய விவரம் அடிக்கடி சமூக போட்டியாளர்களை வெளியாகி வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் பிரபல நடிகர் மாஸ்டர் மகேந்திரன் கலந்துகொள்ள போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மாஸ்டர் மகேந்திரன், சிறுவயதில் இருந்து சினிமாவில் நடித்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கிய இவர் தற்போது இளம் ஹீரோவாக மாறியுள்ளார். ஆனால், இவருக்கு ஒரு ஹீரோவாக ஹீரோ அங்கீகாரம் கொடுக்க ஒரு படமும் அமையவில்லை.

இந்த நிலையில் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதாக நமக்கு தகவல் கிடைத்துள்ளது. பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு பரிச்சயமான சில நடிகர் நடிகைகள் பங்கு பெறுவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது மாஸ்டர் மகேந்திரன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் அவரது திரை வாழ்க்கை ஒரு நல்ல திருப்புமுனையாக அமையும் என்பதால் அவர், இந்த நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

loading...