பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் முதல் போட்டியாளர் இவர் தான்.. உறுதி செய்த தொலைக்காட்சி..!

Report
1323Shares

கடந்த 2017-ம் ஆண்டில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி அதிக பார்வையாளர்களைப் பெற்று பிரபலமானது. தொடர்ந்து கடந்த ஆண்டும் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பானது. 2017-ம் ஆண்டு ஆரவ் வெற்றியாளராகவும் 2018-ம் ஆண்டு நடிகை ரித்விகா வெற்றியாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு பிக்பாஸ் சீசன் 3-யின் ப்ரோமோ வீடியோ வெளியானது. அதில் மீண்டும், கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார்.

இந்நிலையில், ப்ரோமோ வீடியோ வெளியானதிலிருந்தே, பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் போட்டியாளர் யார் என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.

இந்நிலையில், பிக் பாஸ் மூன்றாவது சீசனில் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லும் முதல் போட்டியாளரை உறுதி செய்திருக்கிறது குறித்த தொலைக்காட்சி.

அந்தப் போட்டியாளர் `ஓ.கே. ஓ.கே.' படத்தில் நடிகர் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்த காமெடி நடிகை `ஜாங்கிரி’ மதுமிதா. சின்னத்திரையில் `சின்ன பாப்பா பெரிய பாப்பா'வில் காமெடி செய்தவர்.

சில மாதங்களுக்கு முன்புதான் இவர், தனது உறவினரும் உதவி இயக்குநருமான மோசஸ் ஜோயலைத் திருமணம் செய்துகொண்டார்.

மணமாகி கொஞ்ச நாளிலேயே கணவரை மூன்று மாதங்கள் பிரிந்து எப்படி பிக் பாஸ் வீட்டுக்கு என்றால், அவங்களுக்குச் சவால்னா ரொம்ப பிடிச்ச விஷயம்.

இந்த வாய்ப்பை ஒரு சவாலா எடுத்து பண்ணணும்னு நினைக்கிறாங்க. தவிர, இந்த வாய்ப்பு எல்லாருக்கும் கிடைக்கறதில்லையே பொதுவாகவே வர்ற வாய்ப்புகளைத் தவற விடக்கூடாதுன்னு நினைக்கிறவங்க அவங்க என்கின்றனர் மதுமிதாவுக்கு நெருக்கமானவர்கள்.

முதல் இரண்டு சீசன்களிலும்கூட இவர் அழைக்கப்பட்டதாகவும் பல்வேறு காரணங்களால் அப்போது கலந்துகொள்ளவில்லை என்றும் அப்போது பேசப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

53618 total views