பிக்பாஸ் 3ல் கலந்துகொள்ளும் திரை நட்சத்திரங்கள் இவர்கள் தானா?... வெளியான புகைப்படம்

Report
671Shares

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் திரைபிரபலங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2017-ம் ஆண்டில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி அதிக பார்வையாளர்களைப் பெற்று பிரபலமானது. தொடர்ந்து கடந்த ஆண்டும் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பானது. 2017-ம் ஆண்டு ஆரவ் வெற்றியாளராகவும் 2018-ம் ஆண்டு நடிகை ரித்விகா வெற்றியாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

அதேபோல் இந்த ஆண்டு பிக்பாஸ் 3 நிகழ்ச்சி விரைவில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியான நிலையில் தற்போது பிரபல ரிவி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தற்போது பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் மேலும் 3 பிரபலங்கள் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதில் சின்னத்திரை நடிகை ஆல்யா மானஷா, சாக்‌ஷி அகர்வால், நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் நடிகர், நடிகைகளின் பட்டியலை பிரபல ரிவி நிர்வாகம் விரைவில் வெளியிட வாய்ப்புள்ளது.

மேலும், ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

26819 total views