தனது பிரசவ வீடியோவை வெளியிட்ட பிரபல நடிகையின் மகள்....

Report
3022Shares

நடிகை ராதிகாவின் மூத்த மகள் ரயானே. கடந்த 2016ம் ஆண்டு இவருக்கும் கிரிக்கெட் வீரர் மிதுனுக்கும் திருமணம் நடைபெற்றது. கடந்தாண்டு இந்தத் தம்பதிக்கு ஒரு குழந்தை பிறந்தது.

இந்நிலையில், அன்னையர் தினத்தை முன்னிட்டு ரயானே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தான் கர்ப்பமாக இருந்த போது எடுத்த புகைப்படங்களையும், பிரசவ அறையில் எடுக்கப்பட்ட வீடியோவையும் இணைத்து ஒரு வீடியோவாக அவர் தயாரித்துள்ளார்.

இது தொடர்பான பதிவில் அவர், 'டியர் தாரக், என்னைத் தேர்ந்தெடுத்ததற்காக உனக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் கர்ப்பமாக இருக்கிறேன் எனத் தெரிந்து கொண்ட நாளை மகிழ்ச்சியோடு நினைத்துப் பார்க்கிறேன். எல்லா அன்னையரிடமும் நான் கேட்பது இது ஒன்றை மட்டும் தான். உங்கள் குழந்தைகள் மீது அன்பாக இருங்கள். அவர்களை சரியாக வழி நடத்துங்கள்' எனத் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

109419 total views