5 முறை ஆர்ட் டைரக்டராக தேசிய விருது வென்றவரின் இன்றைய நிலையைப் பாருங்க... கண்கலங்க வைக்கும் நடிகையின் பதிவு..!

Report
1019Shares

கலைவாழ்வில் எந்த சமரசமும் செய்துகொள்ளாத பிரபல ஆர்ட் டைரக்டர் கிருஷ்ணமூர்த்தி ஒரு வாடகை வீட்டில் மிகவும் வறுமையான சூழலில் இருப்பதால் அவருக்குப் பண உதவி தேவைப்படுகிறது என்று மனதை பிசைகிற செய்தியை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் நடிகை வினோதினி வைத்தியநாதன்.

தமிழில் பிரியதர்ஷனின் ‘காஞ்சிவரம்’ படத்தில் அறிமுகமாகி எங்கேயும் எப்போதும், கடல்,வருத்தப்படாத வாலிபர் சங்கம், உட்பட 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர் வினோதினி.

வித்தியாசமான நாடக முயற்சிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டுவரும் அவர், 5 முறை தேசிய விருதுகள்,10க்கும் மேற்பட்ட மாநில அரசின் விருதுகள் வென்ற தமிழின் ஒப்பற்ற கலைஞன் ஆர்ட் டைரக்டர் பி.கிருஷ்ணமூர்த்திக்காக உதவி வேண்டி பதிவிட்டிருப்பது கண்களைக் குளமாக்குகிறது.

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நவீன ஓவியம், சினிமா, நவீன நாடகம் என பல துறைகளில் சிறப்பான சாதனைகள் செய்த ஓவியர் கிருஷ்ணமூர்த்தி தற்போது உடல்நலக் குறைவால் மடிப்பாக்கத்தில் ஒரு சிறிய வீட்டில் கடின வாழ்க்கை வாழ்ந்துவருகிறார். இந்த சமயத்தில் நண்பர்கள் அளிக்கும் ஆதரவு அவருக்கு பல வழிகளில் உதவி செய்வதாக அமையும்.

அவருடைய வங்கிக் கணக்கு விவரங்கள் -

P.Krishnamurthy

SB A/C 2628101000041

Canara Bank

Officers` colony, Adambakkam, Chennai-600088.

IFSC Code CNRB0002628

MICR Code 600015075

நண்பர்கள் இயன்ற பொருளுதவி வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இந்த மாத முடிவிற்குள் அவருக்கு கணிசமான உதவி கிடைக்கும் என உறுதியளித்திருக்கிறேன். என்று தெரிவித்துள்ளார்.

41865 total views