நான் கேமெராவிற்காக எதுவும் செய்யவில்லை, அப்புறம் ஏன் கெட்ட வார்த்தைகளில் திட்டுகிறீங்க..! ஆர்சிபி கேர்ள் வேதனை..!

Report
312Shares

சமூகவலைதளங்களில் பலர் தன்னை கெட்டவார்த்தைகளால் தரக்குறைவாக விமர்சிப்பதாக 'ஆர்.சி.பி கேர்ள்' தீபிகா கோஸ் தெரிவித்துள்ளார்.

இன்றைய காலத்தில் சமூகவலைதளங்களின் தாக்கத்தால் யார் எப்போது பிரபலமாவார்கள் என்பதை யூகிக்க முடியாது. அதனால் தான் கண்ணடித்து ஒரே நாளில் வைரலான சம்பவங்கள் கூட நடந்துள்ளது.

அப்படி சமீபத்தில் ஹைதராபாத், பெங்களூரு போட்டியின் போது, பெங்களூரு அணியை உற்சாகப்படுத்தும் ஆயிரக்கணக்கான ரசிகர்களில் ஒருவராய் வந்தவர் தான் தீபிகா கோஸ். ஸ்டேடியத்தில் கவர்ச்சிகரமான சிவப்பு நிற ஆடையில் குதித்து ஆடிய தீபிகாவை கேமிரா படம்பிடிக்க அதைக் கண்ட ரசிகர்கள் அவரது அழகில் லயித்துப் போனார்கள்.

அன்றிலிருந்து தீபிகா கோஸ், ரசிகர்களின் கனவுக் கன்னியாக மாறினார். பெங்களூரு வெற்றிக்கு கரணம் இவர்தான் என்று சொல்லும் அளவிற்கு இவரது ரசிகர்கள் பித்துப் பிடித்துத் திரிகிறார்கள் ‘ஆர்.சி.பி. கேர்ள்’ என்றிழைக்கப்படும் தீபிகா கோஸ், சமூக ஊடகங்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருபவராகி விட்டார்.

ஆனால் இந்த தாக்கமே தனக்கு தலைவலியாக மாறி இருப்பதாக வருத்தம் தெரிவித்துள்ளார் தீபிகா கோஸ். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், 'நான் பிரபலம் கிடையாது. சாதாரண ஒருவர் தான். எல்லோரையும் போல நானும் ஒரு சாதாரண பெண் தான். கேமிராவுக்காக நான் அப்பட்டி செய்யவில்லை. என்னை ஒரு ரசிகையாக தான் அவர்கள் படம்பிடித்தார்கள்.

சாதாரண ரசிகையாக தான் அவர்கள் என்னை காண்பித்தார்கள்.என்னுடைய பெயர், சுயவிவரங்களை உடனடியாக எப்படி மற்றவர்கள் கண்டுபிடித்தார்கள் என்று எனக்கே குழப்பமாக உள்ளது. சமூகவலைதளங்கில் என்னை ஃபாலோ செய்யும் சிலர்,மிகவும் தரைகுறைவான வார்த்தைகளால் என்னை திட்டுகிறார்கள். இதில் பெண்களும் இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது தான் வேதனையாக உள்ளது.

கேமராவில் இதை எல்லாம் செய்தால் பிரபலமாகலாம் என எதையும் நான் செய்யவில்லை. ஒரு பெண் வைரலானால் இவ்வாறு தான் நடந்து கொள்வார்களா? இது மிகப் பெரிய தவறு. எனக்கு இது மிகப்பெரிய மன உளைச்சலைக் கொடுத்துள்ளது. ஒரு பெண் வைரலாவது தவறா? ஒரு பெண்ணிடம் இப்படி நடந்து கொள்வதை நீங்கள் தவிர்க்க வேண்டும்' என்று பதிவிட்டுள்ளார்.

தீபிகா கோஸின் இந்த பதிவுக்குப் பலரும் ஆறுதல் கூறி வரும் நிலையில், சிலரோ இதையும் கூட இப்பெண் பப்ளிசிட்டிக்காக தன செய்கிறார் என்று கருத்து கூறி வருகின்றனர்.

12701 total views