தம்பி திருமணத்திற்கு செல்லாத சிம்பு.. இது தான் காரணமா?.. அதிருப்தியில் குடும்பத்தினர்..!

Report
5745Shares

நடிகர், இயக்குனர் டி.ராஜேந்தரின் இளையமகனும் இசையமைப்பாளருமான குறளரசன் திருமணம் சென்னையில் நடைபெற்றது. குறளரசன் முஸ்லீம் பெண்ணான நபீலா அஹ்மத் என்பவரை காதலித்ததால் சமீபத்தில் அவர் மதம் மாறினார்.

இதனையடுத்து கடந்த சில நாட்களாக திரையுலக, அரசியல் பிரபலங்களுக்கு தனது தந்தை டி.ராஜேந்தருடன் சென்று திருமண அழைப்பிதழை கொடுத்து வந்த குறளரசனின் திருமணம் இன்று நடைபெறுகிறது.

சிம்பு கலந்து கொள்ளவில்லை

இந்த நிலையில் தனது அடுத்த படத்திற்காக உடலை குறைப்பதற்காக சிம்பு கடந்த சில வாரங்களாக வெளிநாட்டில் உள்ளார். இன்று குறளரசனின் திருமணத்தில் கூட அவர் கலந்து கொள்ளவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் சிம்பு வெளிநாட்டில் இருந்து கிளம்பிவிட்டதாகவும் இன்று நள்ளிரவு அவர் சென்னை திரும்புவார் என்றும் கூறப்படுகிறது

இந்த நிலையில் குறளரசன் - நபீலா அஹ்மத் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வரும் 29ஆம் தேதி சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடைபெறுகிறது. அன்றைய தினம் திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினிகாந்த் மும்பையில் படப்பிடிப்பில் இருப்பதால் அவரது சார்பில் அவரது குடும்பத்தினர் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

198827 total views