பிக்பாஸ் 3ல் பிரபல நடிகை: அவருக்கு சம்பளம் நாள் ஒன்றுக்கு இத்தனை லட்சமா?

Report
555Shares

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ முதல் இரு பாகங்கள் பெரிய வரவேற்பை பெற்றன. முதல் ஷோவில் ஆரவும், இரண்டாவது ஷோவில் ரித்விகாவும் வெற்றி பெற்றனர்.

அது மட்டுமின்றி அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் சினிமா வாய்ப்புகளும் தேடி வந்தன. இதனால் நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகர் நடிகைகள் மத்தியில் விருப்பம் உள்ளது.

இந்த நிலையில் பிக்பாஸ் 3 விரைவில் தொடங்கும் எனத் தெரிகிறது. முதல் இரு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய கமல்ஹாசனே இதனையும் வழங்குவார் என்று கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக நடிகை உதயபானு பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக இவருக்கு தினமும் ரூ.2 லட்சம் வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

17829 total views